[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 08:00.42 AM GMT ]
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நிறுவப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் எதிர்வரும் 2015ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முக்கிய அரசியல் கட்சிகள் பல பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளில் பங்கேற்கவில்லை.
அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமர்வுகளில் இணைத்துக்கொள்ளப்படவில்லல என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYms7.html
உச்ச நீதிமன்றின் தீர்ப்பு குறித்து சபாநாயகரே அறிவித்திருக்க வேண்டும்: ஐ.தே.க- உயர்நீதிமன்ற தீர்மானத்தின் பிரதி வேண்டும்: ஐ.தே.க
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 08:13.08 AM GMT ]
நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றினால் வழங்கப்பட்ட சட்ட விளக்கத்தை அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா வெளியிட்டிருந்தார்.
குறிப்பிட்ட நேரத்தில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட விவாதம் நடத்தப்பட்டதனால் அவர் சட்ட விளக்கம் பற்றிய அறிவிப்பினை மேற்கொண்டதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், சட்ட விளக்கம் தொடர்பில் சபாநாயகரே அறிவித்திருக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியினர் வாதிட்டுள்ளனர்.
மகிந்தவிற்கு முடியும் என்ற உயர்நீதிமன்ற தீர்மானத்தின் பிரதி வேண்டும்: ஐ.தே.க
மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதில் சட்ட ரீதியான தடையில்லை என்று உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்தின் பிரதி ஒன்றை வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் பற்றி ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமல்ல நாட்டு மக்களும் சரியாக அறிந்து கொள்ள வேண்டும்.
உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் எதுவாக இருந்தாலும் சபையின் முதல்வர் என்ற வகையில் நிமால் சிறிபால டி சில்வாபவுக்கு அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அதிகாரம் இல்லை எனவும் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmty.html
Geen opmerkingen:
Een reactie posten