[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 06:52.30 AM GMT ]
மண்சரிவினால் இடம்பெயர்ந்த 58 சிறுவர்களுக்காக 35 இலட்சம் ரூபாவை வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு முதற்கட்டமாக வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மக்களுக்கான அத்தியாவசிய நிவாரணங்களை விநியோகிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதுதவிர பாதிக்கப்பட்ட சகல குடும்பங்களினதும் வங்கிக் கணக்குகளில் அமைச்சினால் இருபத்தையாயிரம் ரூபா வீதம் ஏற்கனவே வைப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மீரியபெத்த மண்சரிவினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு விரைவில் காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹரிகுப்தா சேனாதீர தெரிவித்தார்.
அவர்ககளின் விபரங்கள் அனர்த்தம் ஏற்பட்ட சில தினங்களுக்குள் திரட்டப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய கொஸ்லாந்தையில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான பாதுகாப்பான காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் கூறினார்.
மீரியபெத்தயில் ஏற்பட்ட மண்சரிவினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான 72 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தின் மத்திய பாதுகாப்பு படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா குறிப்பிடுகின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlw3.html
லக்ஷ்மன் கிரியெல்ல மனைவிக்கு பயந்தவர்: பி.ஹெரிசன்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 07:10.04 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனைவிக்கு பயம் என்று லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார். என்ன செய்தாலும் வீட்டில் மனைவியை நல்ல விதமாக வைத்து கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மறுநாள் காலையில் சுதந்திரமாக வீட்டில் இருந்து வெளியேற முடியாது என்றும் அவர் கூறினார்.
இதனால் மனைவியை கும்பிட்டாவது நல்லவிதமாக வைத்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார்.
உண்மையில் லக்ஷ்மன் கிரியெல்ல மாத்திரமல்ல எந்த ஜம்பவானாக இருந்தாலும் அவரும் தனது மனைவிக்கு பயந்தவராகவே இருப்பார்.
இதுதான் உண்மை என ஹெரிசன் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlw4.html
முஸ்லிம் காங்கிரஸ் இனவாதத்தை தூண்டுகிறது: தேசிய சுதந்திர முன்னணி
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 07:16.46 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் தனியான நிர்வாக மாவட்டத்தை கோருகிறது. மக்கள் மீதுள்ள உண்மையான அன்பில் அதனை கோரினால் பிரச்சினையில்லை.
எனினும் முஸ்லிம் காங்கிரஸ் இனவாத அடிப்படையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
பல ஆண்டுகள் ஆகியும் முஸ்லிம் காங்கிரஸினால் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது போயுள்ளது. அந்த கட்சி இனவாதத்தை தூண்டுகிறது.
இதனால், அப்பாவி முஸ்லிம் மக்கள் இழப்பை செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படுவதுடன் பாதிப்புகளை சந்திக்க நேர்ந்துள்ளது எனவும் மொஹமட் முஸ்ஸாமில் மேலும் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlw5.html
Geen opmerkingen:
Een reactie posten