தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 17 november 2014

வட மாகாண சபையின் செயற்­பா­டு­க­ளுக்­கான தடை!



வலைத்தள பதிவாளர்களின் மாநாடு இலங்கையில்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 07:20.16 AM GMT ]
இலங்கையின் இயற்கை வனப்பு மற்றும் விருந்து உபசரிப்பை முழு உலகத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் தொழில்சார் வலைத்தள பதிவாளர் சங்கத்தினருடன் இணைந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான நிறுவனம் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வலைத்தள பதிவாளர்களின் முதலாது ஆசிய மாநாட்டில் கலந்து கொள்ள வலைத்தள பதிவாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.
46 வலைத்தள பதிவாளர்கள் இலங்கை வந்துள்ளதுடன் மாநாடு நாளை ஆரம்பமாக உள்ளது.
உலகில் முக்கிய வலைத்தள பதிவாளர்கள் நேற்று பொலனநறுவையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சைக்கிள்களில் சென்று பார்வையிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjp6.html
வட மாகாண சபையின் செயற்­பா­டு­க­ளுக்­கான தடை
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 07:29.40 AM GMT ]
மாகாண சபை­களின் அதி­கா­ரங்­களை மத்­திய அர­சாங்கம் பறித்­துக் ­கொண்டு அவற்றை இயங்­க­வி­டாது முடக்கி வரு­கின்­றது. இதனால் மாகாண சபைகள் சுயா­தீ­ன­மாக இயங்­க­மு­டி­யாத சூழல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது என்று எதிர்க்­கட்­சிகள் பாரா­ளு­மன்­றத்தில் குற்றம் சாட்­டி­யுள்­ளன.
பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஆகிய கட்­சி­களின் உறுப்­பி­னர்கள் இந்தக் குற்­றச்­சாட்­டினை முன்­வைத்­துள்­ளனர்.
ஆளு­ந­ருக்கு முழு அதி­கா­ரத்­தையும் வழங்கி வட மாகாண சபையை அர­சாங்கம் அடக்கி ஒடுக்கி வைத்­தி­ருக்கும் நிலையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச கருணை காட்­டினால் மாத்­தி­ரமே அந்த சபை­யி­னூ­டாக எதுவும் இடம்­பெ­றலாம் எனும் தோற்றம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.
வட மாகாண சபை­மீது அர­சாங்கம் தான்­தோன்­றித்­த­ன­மான முறையில் தலை­யீ­டு­களை செய்து வரு­கின்­றது என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­துள்ளார்.
நாட்­டி­லுள்ள 9 மாகாண சபை­களில் வட மாகாண சபையைத் தவிர ஏனைய அனைத்து மாகா­ண­ச­பை­களும் 13வது திருத்தச் சட்­டத்­தி­லுள்ள அதி­கா­ரங்­களை ஏதோ ஒரு­வ­கையில் அனு­ப­விக்­கின்­றன. ஆனால் யாருக்­காக மாகாண சபை முறைமை கொண்­டு­ வ­ரப்­பட்­டதோ அவர்­களின் மாகா­ணத்­துக்கு மட்டும் அதி­காரம் இல்லை.
வட­மா­காண சபையின் அதி­கா­ரங்கள் ஆளு­னரின் கையில் உள்­ளன. அதற்­கான சக்­தியை ஜனா­தி­ப­தியே கொடுத்­துள்ளார்.
ஜனா­தி­ப­தியின் கருணை இல்­லா­விட்டால் வட­மா­காண சபைக்கு எது­வுமே செய்­ய­முடி­யாது. வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு தனது தலைமைச் செய­லா­ள­ரைக்­கூட நிய­மிக்­க ­மு­டி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது என்றும் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி, மாகாண சபைகள் அமைச்சு மீதான விவா­தத்தில் கலந்து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் எம்.பி. தமது ஆதங்­கத்தை இவ்­வாறு வெளிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.
இதேபோல் பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வசந்த அலு­வி­கார மாகாண சபை­களின் அதி­கா­ரங்­களை மத்­திய அர­சாங்கம் பறித்­துக்­கொண்டு அவற்றை இயங்­க­வி­டாது முடங்கச் செய்­துள்­ளது. மாகாண சபையில் உறுப்­பி­னர்­க­ளாக அனு­பவம் பெற்ற பெரும்­பா­லானோர் இந்த சபையில் இன்று உறுப்­பி­னர்­க­ளாக உள்­ளனர்.
மத்­திய அர­சாங்கம் மாகாண சபை­க­ளுக்­குள்ள அதி­கா­ரங்­களை பறித்­து­ வ­ரு­கின்­றது. சுகா­தார அமைச்சு, விவ­சாய அமைச்சு என்­பன மத்­திய அமைச்­சிலும் மாகாண அமைச்­சிலும் உள்­ளன.
ஆனால் இன்று இவ்­வ­மைச்­சுக்­களின் அதி­கா­ரங்கள் பறிக்­கப்­பட்­டுள்­ளன. மாகாண சபை­க­ளுக்குச் சொந்­த­மான சில வைத்­தி­ய­சா­லை­களை மத்­திய அர­சாங்கம் பொறுப்­பேற்­றுள்­ளது.
மாகாண சபை­களின் அமைச்­சு­களின் அதி­கா­ரங்கள் பறிக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான நிலையில் முத­ல­மைச்­சர்­களின் சம்­மே­ள­னங்­க­ளின் ­போது ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­படும் பிரே­ர­ணைகள் கூட நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. அந்த அதி­கா­ரத்­தையும் மத்­திய அரசு பறித்­துக் ­கொண்­டுள்­ளது.
முத­ல­மைச்­சர்­களின் சம்­மே­ளனம் வெறு­மனே ஒரு மரண சகாய நிதி உதவிச் சங்­க­மாக மாறி­விட்­டது என்று தெரி­வித்­துள்ளார்.
எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் இவ்­வாறு குற்­றம்­சாட்­டிய நிலையில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கா­ர­வும் மாகாண சபை­களை மத்­திய அர­சாங்கம் அடி­மைப்­ப­டுத்­தாது அதனை சுயா­தீ­ன­மாக இயங்கும் நிலையை ஏற்­ப­டுத்தி மக்­க­ளுக்கு நேர­டி­யான சேவை­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு முன்­வ­ர­வேண்டும்.
மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி சபைகள் கிராம மக்­க­ளுடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்ட மக்கள் அமைப்­புக்­க­ளாகும்.
எனவே மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி சபை­களின் அதி­கா­ரங்­களை மத்­திய அர­சாங்கம் அடி­மைப்­ப­டுத்­திக்­கொள்ளக் கூடாது.
முத­ல­மைச்­சர்­களின் சம்­மே­ள­னத்தில் நிறை­வேற்­றப்­படும் பிர­க­ட­னங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு மத்­திய அரசின் அனு­மதி தேவை இல்லை.
அந்தப் பிர­க­ட­னங்­களை முத­ல­மைச்­ச­ரினால் நடை­மு­றைப்­ப­டுத்த முடியும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.
ஆளு­னர்கள், மாகாண சபை நிர்­வா­கத்­துக்­கி­டையே முரண்­பா­டுகள் நீக்­கப்­பட வேண்டும்.
எதிர்­கா­லத்தில் அர­சி­ய­ல­மைப்பில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டும் ­போது இவை தொடர்­பி­லான திருத்­தங்­களும் மேற்­கொள்­ளப்­பட வேண்­டும என்றும் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார யதார்த்­த­பூர்­வ­மாக கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெற்ற இந்த விவா­தத்தில் உரை­யாற்­றிய உள்­ளூ­ராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம் அதா­வுல்லா வட­மா­காண சபை­யி­னதோ அல்­லது வட­மா­காண சபை முத­ல­மைச்­ச­ரி­னதோ எந்­த­வொரு அதி­கா­ரத்­தி­னையும் மத்­திய அர­சாங்கம் எடுத்­துக்­கொள்­ள­வில்லை எனக் கூறி இருக்­கின்றார்.
இவ்­வாறு மாகாண சபை­க­ளுக்கு உரிய அதி­கா­ரங்கள் வழங்­கு­வ­தற்கு மத்­திய அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு எதிர்க்­கட்­சி­க­ளினால் பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.
உண்­மை­யி­லேயே நாட்­டி­லுள்ள 9 மாகாண சபை­களில் 8 மாகாண சபைகள் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்தின் வசமே உள்­ளன.
வட மாகாண சபையின் ஆட்சி மட்­டுமே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் வசம் உள்­ளது.
கடந்த வருடம் செப்­டெம்பர் மாதம் வட­மா­காண சபைக்­கான தேர்தல் நடத்­தப்­பட்­ட­ போது அந்த மாகாண சபை­யி­னையும் கைப்­பற்றும் முய­ற்­சியில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கம் ஈடு­பட்­டி­ருந்­தது.
ஆனாலும் வட மாகாண மக்கள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு பேரா­த­ர­வினை வழங்கி மாகாண சபை நிர்­வா­கத்தை கூட்­ட­மைப்­பிடம் கைய­ளித்­தி­ருந்­தனர்.
இவ்­வா­றான நிலையில் மத்­திய அர­சாங்­கத்­துடன் முரண்­ப­டாது நல்­லி­ணக்­கத்­துடன் செயற்­ப­டு­வ­தற்­கான நல்­லெண்ண சமிக்­ஞை­களை வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் அர­சாங்­கத்­துக்கு காண்­பித்­தி­ருந்தார்.
பெரும் எதிர்ப்­புக்கு மத்­தியில் முத­ல­மைச்­ச­ராக சி.வி. விக்­கி­னேஸ்­வரன் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச முன்­னி­லையில் பத­விப்­பி­ர­மாணம் செய்­தி­ருந்தார்.
தனது அமைச்சுப் பொறுப்­புக்­க­ளைக்­கூட ஜனா­தி­பதி முன்­னி­லை­யி­லேயே அவர் பொறுப்­பேற்­றுக்­கொண்டார்.
இவ்­வாறு நல்­லெண்ண வெளிப்­பாட்டை காண்­பித்த முத­ல­மைச்சர் அர­சாங்­கத்­துடன் இணக்­கப்­பாட்­டுடன் செயற்­பட முன்­வந்­தி­ருந்தார்
வட­மா­காண ஆளு­ன­ராக சிவில் நிர்­வாக அதி­காரி ஒரு­வரை நிய­மிக்க வேண்­டு­மென்றும் மாகாண பிர­தம செய­லா­ள­ராக புதி­யவர் ஒரு­வரை நிய­மிக்க வேண்­டு­மென்றும் முத­ல­மைச்சர் கோரி­யி­ருந்தார்.
இது­கு­றித்து கடந்த ஜனவரி மாதம் 2ம் திகதி ஜனாதிபதியைச் சந்தித்து முதலமைச்சர் பேச்சுவார்த்தையும் நடத்தினார்.
அப்போது இந்த இரு விடயங்களுக்கும் இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி அதனையும் நடைமுறைப்படுத்தவில்லை.
அர­சாங்­கத்­து­ட­னான நல்­லி­ணக்க முயற்­சிகள் தோல்­வி­ய­டைந்­ததால் வட­மா­கா­ண­சபை நிர்­வா­கத்­துக்கும் மத்­திய அர­சாங்­கத்­துக்­கு­மி­டையில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டி­ருந்­தன.
இதன் ­கா­­ரணமாக வட­மாகாண சபையின் செயற்­பா­டு­களை உரிய வகையில் மேற்­கொள்ள முடி­யா­த­நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.
வட­மா­காண சபையின் செயற்­பாடு­க­ளுக்கு மத்­திய அர­சாங்கம் தடை­களை ஏற்­ப­டுத்­தி­வ­ரு­வ­தாக குற்­றச்­சாட்­டுக்கள் எழுப்­பப்­ப­டு­கின்­றன.
எனவே, எதிர்­கா­லத்­தி­லா­வது வட­மா­காண சபையின் செயற்­பா­டுகள் உரிய வகையில் தங்­கு­த­டை­யின்றி இடம்­பெ­று­வ­தற்கு விட்டுக்கொடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துகின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjp7.html

Geen opmerkingen:

Een reactie posten