[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 06:11.08 AM GMT ] [ வலம்புரி ]
மூன்றாவது தடவையாகவும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்பதை அறியும் பொருட்டு மகிந்த ராஜபக்ச உயர் நீதிமன்றிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மகிந்தவுக்கு உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ள பதிலில் மூன்றாவது தடவையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடலாம் என்று அறிவித்துள்ளது.
மூன்றாவது தடவையாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும் அந்தத் தகைமை ஏற்புடையதாகி விடும்.
எனினும், உயர் நீதிமன்றம் அனுப்பிய கருத்துரையில் ஏற்கெனவே ஜனாதிபதியாக இருந்தவர்களுக்கு இந்தத் தகைமை பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இத்தகையதொரு குறிப்புரை உயர் நீதிமன்றத்தின் முன்மொழிவில் இடம்பெற்றிருக்குமாயின் சந்திரிகா குமாரதுங்க மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டிட முடியாது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பொறுத்தவரை அவருக்கு ஈடான ஒரு வேட்பாளர் என்றால் சந்திரிகாவாக மட்டுமே இருக்க முடியும்.
ஏனெனில், இவர்கள் இருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்ற பிள்ளைகள். குந்தியின் வயிற்றில் பிறந்த கர்ணனே பாண்டவர்களுக்கு பலமான எதிரியாகவிருந்தான்.
எனவே, மகிந்த ராஜபக்வை எதிர் கொள்ளக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது சந்திரிகாவாக மட்டுமே இருக்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறலாம்.
எனினும், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரை வெளிவராத நிலையில், ஆளுந்தரப்புக் கூட தவறான தகவல்களை வெளியிட்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க போட்டியிடாமல் செய்வதற்கான சில ஏற்பாடுகளை உருவாக்கியிருக்கலாம்.
எனினும், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரை வெளிவராத நிலையில், ஆளுந்தரப்புக் கூட தவறான தகவல்களை வெளியிட்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க போட்டியிடாமல் செய்வதற்கான சில ஏற்பாடுகளை உருவாக்கியிருக்கலாம்.
எனவே எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாமா? என்பது குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆராய வேண்டும்.
அவ்வாறானதொரு ஆராய்வில் உயர் நீதிமன்றின் முன்மொழிவு எவ்வாறு இருந்திருக்கும் என்பதை ஊகித்தறிய முடியும்.
சந்திரிகா குமாரதுங்க மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டிட முடியாது என்று நீதிமன்றத்தின் பரிந்துரையிருக்குமாயின் “...நெஞ்சத்துக் கோடாமை...” எவ்வாறு உள்ளதென்பதை உணரமுடியும்.
எதுவாயினும் எதிர்க்கட்சிகள் தேடுகின்ற ஒரு நல்ல பொது வேட்பாளர் சந்திரிகா குமாரதுங்கவாக மட்டுமே இருக்க முடியும்.
சந்திரிகாவை மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதற்கான சகல வழிவகைகளையும் மேற்கொள்வது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கடமையாகும்.
சந்திரிகாவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தவது முடியாத காரியம் என்றால் அவரது சகோதரி சுனேத்திராவை பொது வேட்பாளராக நிறுத்துவது உசிதமானது.
ஒரு சகோதரிக்கு பொருந்தவில்லை எனில் அடுத்த சகோதரிக்கு பொருத்தம் பார்ப்பதில் எந்தத் தவறுமில்லை.
சந்திரிகாவிற்குப் பொருந்தாவிடில் சுனேத்திராவுக்கு சாதகம் நிச்சயம் பொருந்தும். பொருத்தம் ஒரே வீட்டில் இருக்கும் போது, வேறு ஒருவரை தேடித்திரிவது அர்த்தமற்றது.
ஆகையால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஒன்றில் சந்திரிகா அல்லது அவரது சகோதரி சுனேத்திரா.
http://www.tamilwin.com/show-RUmszBScKYju3.html
புனிதமான கார்த்திகை மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது: சரவணபவன் எம்.பி
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 06:48.07 AM GMT ]
கார்த்திகை மாதம் என்பது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு புனிதமான மாதமாகும். இதன் புனிதத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இம் மாதத்தில் ஒரு புல்லுருவியும் பிறந்துள்ளது என்பதனை அண்மையில் பத்திரிகை வாயிலாக அறிந்துள்ளேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் நடத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரின் இறுதிநாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கார்த்திகை மாதம் விசேடத்துக்குரிய புனிதமான மாதமாகும். ஏனெனில் இம்மாதம் 26ஆம் திகதி எமது தேசியத் தலைவர் பிறந்துள்ளார்.
இதேபோல் எமது இனத்தின் விடுதலைக்காகப் பேராடி உயிர் நீத்த மாவீரர்களின் நினைவுநாள் கார்த்திகை 27 ஆகும். இதனால் இந்த மாதம் புனிதமடைகிறது.
ஆனால் அரசுடன் இணைந்து இணக்க அரசியல் பேசி எம் இனத்தை நசுக்க நினைக்கும் புல்லுருவியும் பிறந்தது இம்மாதம் 10ஆம் திகதி என்பதை அண்மையில் பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.
தற்போது நான் பங்குபற்றும் நிகழ்வுகளில் இளைஞர் கூட்டமே அதிகமாகக் காணப்படுகின்றது. அதற்கு விளையாட்டுத் தான் காரணமாகவுள்ளது.
அண்மையில் பருத்தித்துறையில் நடைபெற்ற உதைபந்தாட்டத்தின் இறுதிநாள் நிகழ்விலும் இன்றைய இறுதிநாள் நிகழ்விலும் இளைஞர்களே அதிகமாகக் காணப்படுகின்றனர்.
இந்த நிகழ்வை திக்கம் இளைஞர்கள் மிகச் சிறப்பாக ஒழங்குபடுத்தியுள்ளனர். இங்கு பல இளைஞர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் யோசிக்க வேண்டும். தற்போது மாவீரர் நாள் வரப்போகின்றது என்பதால் இராணுவத்தையும், புலனாய்வுப் பிரிவினரையும் வீதிகளில் கொட்டி விட்டுள்ளார்கள். அவர்கள் எங்கும் ஊடுருவலாம்.
ஆனால் எம் மனதை ஊடுருவ முடியாது. அதேபோல் இவர்கள் எத்தனை பேரைக் கொன்று குவித்தாலும் எங்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூருவோம். இங்கு நான் மாவீரர் எனக் குறிப்பிடுவது விடுதலைப் புலிகளையே சாரும்.
தற்போது ஏதாவது சூழ்ச்சி செய்து பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து பல்கலைக்கழகத்தை மூடிவிட வேண்டும் என எண்ணுகிறார்கள். இதேபோல் விடுவிக்கப்பட்ட போராளிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
எமக்காக உயிர்நீத்தவர்களை மறந்துவிடக்கூடாது. எந்த இடர்களிலும் நாம் இதனை நிச்சயமாகச் செய்ய வேண்டும். இத்துடன் எமது போராட்டம் முடியவில்லை. அரசியலில் எந்த வழிகளில் எந்த வகையில் போராட முடியுமோ அந்த வகையில் போராடுவோம் என்றார்.
இரண்டாம் இணைப்பு
2015ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களின் உரை
http://www.tamilwin.com/show-RUmszBScKYju5.html
Geen opmerkingen:
Een reactie posten