EPDP தவராசாவின் மின்னஞ்சல்! ரத்ன தேரரின் ‘முகநூலிற்கு வந்தது ஆப்பு
வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவின் தனிப்பட்ட மின்னஞ்சல் ஹக்கர்ஸ்களால் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முடக்கப்பட்டுள்ளது.
தான் உக்ரைனில் இருந்த காலப்பகுதியில், தன்னுடைய மின்னஞ்சல் முடக்கப்பட்டதாகவும் இதனால் தன்னுடைய மின்னஞ்சல் மூலமான தொடர்புகள் இல்லாமல் போயுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து, தற்போது புதிய மின்னஞ்சலை பயன்படுத்தி வருவதாக தவராசா மேலும் கூறினார்.
ரத்ன தேரரின் ‘முகப்புத்தகம்’ முடக்கம்
தன்னுடைய முகப்புத்தக மற்றும் மின்னஞ்சல் ஆகிய இரு கணக்குகளும் முடக்கப்பட்டுவிட்டதாக ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/86486.html
காணிப் போராட்டத்தில் களத்தில் களைத்துப் போன கூட்டமைப்பு…
இது வரை காலமும் இத்தகைய நில ஆக்கிரமிப்பு தொடர்பிலான நில அளவைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்த தமிழ் அரசியல் தலைமைகள் ஓய்வு நிலைக்கு சென்றிருந்த நிலையிலேயே அப்பகுதி கிராம அலுவலரது எதிர்ப்பினையும் தாண்டி இன்று நில அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தகைய நில ஆக்கிரமிப்பு போராட்டங்களில் முன்னின்று செயற்படும் வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் இருதய சத்திரசிகிச்சைக்காக கொழும்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் எவரும் நில அளவை இடம்பெறும் இடங்களிற்கு சென்றிருக்கவில்லை.
இன்று அளவீடு செய்யப்பட்ட 700 ஏக்கர் நிலத்தை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்து வெளியிடப்படுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே யாழ்.குடாநாட்டில் படை முகாம்களை அமைப்பதற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களது காணிகளை சுவீகரிப்பதற்கேதுவாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அளவீட்டுப்பணிகள் மீண்டும் எதிர்வரும் 11ம் திகதி ஆரம்;பிக்கப்படவுள்ளதாக செய்திகள் முன்கூட்டியே வெளியாகியிருந்தன.
இது வரை குடாநாட்டின் பல பகுதிகளிலும் முப்படையினராலும் ஆக்கிரமிக்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்க ஏதுவாக நில அளவை பணிகள் மேற்கொள்ள முயற்சிகள் இடம்பெற்றிருந்தது.
எனினும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளது கடுமையான எதிர்ப்புக்களையடுத்து பல தடவைகள் இம்முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையினில் இது வரைகாலமும் யாழ்.மாவட்ட நில அளவைத்திணைக்கள ஆணையாளராக இருந்த தமிழரான உள்ளுர் அதிகாரி மாரடைப்பினால் அண்மையினில் உயிரிழந்திருந்தார்.இதையடுத்து அவசர அவசரமாக தென்னிலங்கையிலிருந்து சிங்களவரான அதிகாரியொருவர் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்து வரும் இருமாத காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள அவர் தனது பதவி காலத்தினுள் முழுமையாக அளவீடுகளினை பூரணப்படுத்தி சுவீகரிப்பிற்கான வர்த்தமானி அறிவிப்பினை விடுக்க ஏற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
உள்ளுர் பணியாளர்களினை புறந்தள்ளி முழுவதுமாக தென்னிலங்கையிலிருந்து சிங்கள பணியாளர்களே அளவீட்டு பணிகளிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர்களே இன்றைய தினம் அளவீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.
இதனிடையே அளவீடு தொடர்பான தகவல்கள் வெளியே கசிந்தால் உள்ளுர் பணியாளர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பப்போவதாகவும் புதிதாக வந்த ஆணையாளர் மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
http://www.jvpnews.com/srilanka/86489.html
புலிகளின் செய்தி வாசிப்பாளர் “ஹரிணி” பிரேசில் பயணம்
ஈழத்து உறவுகளுடன் புகழிடக் கோரிக்கையுடன் ஒரு படகு இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்ரேலிய நோக்கி சென்ற பொழுது படகில் ஏற்ப்பட்ட பாதிப்பால் மூழ்கும் நிலை ஏற்பட்டு தத்தளித்த வேளை அவுஸ்ரேலிய அரசு துரித கதியில் நடவடிக்கை எடுத்து ஒரு பிலிப் பெயின்ஸ் நாட்டு கப்பலில் அவர்களை ஏற்றி துபாய் அரசிடம் பாதுகாப்புடன் ஒப்படைக்க பட்டு ஐ.நா தொண்டு நிறுவனத்தால் இதுவரை அவர்களுக்கு அடைக்கலம் வழங்கி இன்று அந்த புகலிட கோரிக்கையளர்கள் முழுவதுமாக ஒவ்வொரு நாட்டில் புகழிடம் வழங்கப் பட்டு நிறைவை கண்டது.
இன்று நிறைவாக இறுதியாக இருந்த ஏழு பேருக்கும் பிரேசில் நாடு புகழிடம் வழங்கி அவர்களை அரவணைத்து கொள்கின்றது. அந்த புகழிட கோரிக்கையாளர்களில் ஈழத்து ஊடகவியலாளர்களில் ஒருவரான ஹரிணி இன்று அவளது சுதந்திர பயனத்தை தொடங்குகின்றாள்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர்களை இலங்கைக்கு திரும்பி அனுப்ப போவதாக ஐ. நா அறிவித்த வேளை பல தளங்கள் உணர்வுடன் அந்த ஈழத்து உறவுகளுக்கு குரல் கொடுத்தது.
http://www.jvpnews.com/srilanka/86478.html
Geen opmerkingen:
Een reactie posten