தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 15 november 2014

சம்பந்தன், சுமந்திரன், விக்கி ஆகியோர் புலிகள் அல்லர்!- அமைச்சர் டிலான்

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கு மத்தியில், எதிர்பார்க்கப்படுகின்ற கட்சி மாறல்கள்!
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 12:19.47 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் கட்சியில் இருந்தும் எதிர்க்கட்சியில் இருந்தும் கட்சி மாறல் பேச்சுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பல உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையப் போவதாக அரசாங்கத் தரப்பினர் கூறுகின்றனர்.
அரசாங்கத் தரப்பினர் பலர் தம்முடன் இணைந்து கொள்ளப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறி வருகின்றனர்.
ஜாதிக ஹெல உறுமய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் தகவல்படி 15 அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தல் வெளியான பின்னர், தமது தரப்புக்கு ஆதரவளிப்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது
எனவே நிச்சயமாக கட்சி மாறல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlt7.html
கரு, சந்திரிக்கா பொது வேட்பாளராக போட்டியிட்டாலும் ஆதரவளிக்கத் தயார்!– சஜித் பிரேமதாச
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 12:53.08 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய அல்லது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டாலும் ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்சி யாரை பொது வேட்பாளராக தீர்மானிக்கின்றதோ அவருக்கு ஆதரவளிக்க வேண்டியது எனது கடமையாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அனுமதி மற்றும் ஆசீர்வாதத்துடன் போட்டியிடும் நபருக்கு நான் ஆதரவளிப்பேன்.
தனிப்பட்ட ரீதியில் எவ்வாறான நிலைப்பாடு காணப்பட்டாலும் கட்சி என்ற ரீதியில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு செயற்படுவேன்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது பலமாக அமையும் என்பதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடாவிட்டால் தேர்தலில் போட்டியிடத் தயார்.
எனினும், கட்சித் தலைமைப் பொறுப்பு எனக்கு வழங்கப்பட வேண்டும் மற்றும் கட்சியின் பூரண ஆதரவும் அவசியம் என சஜித் பிரேமதாச சர்வதேச ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlu1.html
சம்பந்தன், சுமந்திரன், விக்கி ஆகியோர் புலிகள் அல்லர்!- அமைச்சர் டிலான்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 01:14.38 AM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் உள்ள போதும் ஆர்.சம்பந்தனோ, சுமந்திரனோ அல்லது விக்னேஸ்வரனோ புலிகள் அல்லர் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் சிலர் இருக்கின்றனர். ஆனால் சம்பந்தனோ, சுமந்திரனோ, சி.வி.விக்னேஸ்வரனோ புலிகளல்லர்.
தமிழ் பெயர் இருப்பதற்காக ஒருவரை புலி என்று கூற முடியாது. ஆனால் தமிழ் பெயர் உள்ள ஒருவருக்கு இலங்கை நிரந்தர வதிவிட பிரதிநிதியால் உத்தியோகபூர்வ வாசஸ்தல திருத்த பணி வழங்கப்பட்டதற்காக சஜித் எம்.பி அவரை புலி என்கிறார்.
இந்தியாவுடன் கூடுதல் தொடர்பு வைப்பதாக த.தே.கூ. குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் ஜே.வி.பி யோ நாம் இந்தியாவுடன் கூடுதல் தொடர்பு வைப்பதாக குறை கூறுகிறது.
சஜித் பிரேமதாஸ 13வது திருத்தத்தை முழுமையாக ஏற்கவில்லை. ஆரம்பத்தில் அவர் அதற்கு எதிரான நிலைப்பாட்டிலே இருந்தார். அவரது தந்தையும் 13வது திருத்தத்தை எதிர்த்து வந்தார்.
13ஆவது திருத்தத்தை குப்பையென்று யுத்த காலத்தில் கூறிய சம்பந்தன் இன்று அதனை அமுல்படுத்துமாறு கோருகிறார்.
நான் நீண்ட காலமாக இருந்த நிலைப்பாட்டிற்கு சஜித் பிரேமதாஸ வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
வெளிவிவகார சேவையில் சிறந்த தூதரக சேவை இருக்கையில் தனியார் நிறுவனங்களின் உதவி தேவையில்லை. எமது வெளிநாட்டுக் கொள்கை சகல நாடுகளுடன் தொடர்பு வைத்திருப் பதையே எதிர்கட்சியின் உரைகள் உறுதி செய்கின்றன.
பொது நலவாய செயலாளர் நாயகம் பதவிக்கு கதிர்காமர் போட்டியிட்ட போது ஐ.தே.க நியூசிலாந்து வேட்பாளருக்கே ஆதரவு வழங்கியது. ஆனால் கதிர்காமர் சிறந்த வெளிவிவகார அமைச்சராக இருந்ததாக சஜித் எம்.பி இன்று பாராட்டுகிறார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlu2.html

Geen opmerkingen:

Een reactie posten