தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 13 november 2014

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தொடர்ந்தும் பேசுவோம்: ஜாதிக ஹெல உறுமய

உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபையில் சமர்பிக்கப்படமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது!– ஜே.வி.பி
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 10:38.49 AM GMT ]
உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறின. எனினும் இதுவரை அதனை ஆளும் தரப்பு மேற்கொள்ளவில்லை. இது  பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியும் எனவும் இரண்டாம் தவணை பதவிக்காலத்தின் 4 ஆண்டு நிறைவின் பின் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும் எனவும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்தை சபை முதல்வர் நாடாளுமன்றத்தில் அறிவித்த போதும் அதனை சபையில் சமர்பிக்கவில்லை.
உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் பற்றிய ஆவணம் ஒன்றை நேற்று முன்தினம் சபை முதல்வரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் வாசித்தார்.
10 அடங்கிய உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள் குழு ஏகமனதாக இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறின. எனினும் இதுவரை அதனை ஆளும் தரப்பு மேற்கொள்ளவில்லை.
10 நீதியரசர்களும் ஏகமானதாக இந்த கருத்தை வெளியிட்டிருப்பார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சட்டத்துறையில் பேசப்பட்டு வருகிறது.
அத்துடன் உயர்நீதிமன்றத்தின் கருத்து எதுவாக இருந்தாலும் எந்த விடயம் சம்பந்தமான தீர்ப்பாக இருந்தாலும் நீதிமன்றத்திற்கு கௌவரமனித்து அதனை விமர்சிக்கும் முழுமையான உரிமை குடிமக்களுக்கு உள்ளது என சட்டவாதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை ஜே.வி.பி நேற்று தனது தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்க முடியாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmu2.html
மத்தள விமான நிலையத்தில் வரவுக்கு மீறிய செலவு
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 10:45.30 AM GMT ]
மத்தள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்ட நாளில் இருந்து 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை விமான நிலையத்தை நடத்தி செல்வதற்காக 2 ஆயிரத்து 756 மில்லியன் ரூபா செலவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை மத்தள விமான நிலையத்தின் மொத்த வருமானம் 143.79 மில்லியனாகும்.
ஆனால் மொத்த செலவு 2 ஆயிரத்து 900 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை விமான நிலையத்தின் மொத்த வருமானம் 48.1 மில்லியன் ரூபா. எனினும் இந்த காலப்பகுதியில் செலவு மாத்திரம் ஆயிரத்து 403.65 ரூபா. 2013 ஆம் ஆண்டில் மத்தள விமான நிலையத்திற்கு 760 விமானங்கள் வந்து சென்றன.
2014 ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஆயிரத்து 28 விமானங்கள் வந்து சென்றுள்ளன. இதனை தவிர மத்தள விமான நிலையத்தில் 2013 ஆம் ஆண்டு 565 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
தற்போது 600 பேர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmu3.html
மினுவாங்கொடையில் எரிபொருள் நிலையம் கொள்ளை
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 10:56.30 AM GMT ]
மினுவாங்கொடையில் எரிபொருள் நிரப்பும் நிலையமொன்று நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை, மெடேமுல்லை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையமொன்றில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார்சைக்கிளில் வருகை தந்த கொள்ளையர்கள் இருவரும் முகம் முழுவதையும் மறைக்கும் வகையில் ஹெல்மட் அணிந்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிலையத்தில், இருந்த பணத்தைக் கொள்ளையடித்த பின்னர் அங்கிருந்த உரிமையாளரின் வாகன டயர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்கள் கொள்ளையடித்த பணம் தொடர்பில் இதுவரை சரியான விபரம் வெளியிடப்படவில்லை.
எரிபொருள் நிலையத்தின் கண்காணிப்புக் கேமராவின் பதிவுகளை பெற்றுள்ள பொலிசார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmu5.html

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தொடர்ந்தும் பேசுவோம்: ஜாதிக ஹெல உறுமய
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 10:50.58 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்திவருகிறது.
எனினும் இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஹெல உறுமயவின் மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை நாடாளுமன்றத்தின் ஊடாக ஒழிப்பது தொடர்பில் ஏற்கனவே ஹெல உறுமய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிடம் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது இது தொடர்பில் இதுவரை இடம்பெற்ற பேச்சுக்கள் தோல்வியடைந்துள்ளன.
எனினும் தொடர் பேச்சுக்கள் இடம்பெறும் என்று கம்மன்பில குறிப்பிட்டார்.
இதேவேளை அத்துரலியே ரத்தன தேரர் கொண்டுள்ள நிலைப்பாட்டையே கட்சியும் கொண்டிருப்பதாக தெரிவித்த அவர் இது தொடர்பில் கட்சிக்குள் முரண்பாடுகள் இல்லை என்றும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmu4.html

Geen opmerkingen:

Een reactie posten