[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 03:06.36 PM GMT ]
வாக்குரிமையை மீள வழங்க வலியுறுத்தக்கோரி சரத் பொன்சேக்காவின் ஆதரவாளர்கள் இன்று பேரணியொன்றை நடத்தினர்.
பத்து இலட்சம் கையெழுத்துக்களைப் பெறும் வேலைத் திட்டத்தின் அடிப்படையில், கண்டியில் இருந்து புறப்பட்டு வந்த வாகனப் பேரணி மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYis5.html
ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஆசிய நாட்டவர்கள்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 03:04.52 PM GMT ]
நியாயமான தேர்தல் ஒன்றுக்கான பொதுமக்கள் நடவடிக்கை என்ற பெப்ரல் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி 35 ஆசிய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் உள்ளுர் கண்காணிப்பாளர்களும் சர்வதேச கண்காணிப்பாளர்களும் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர் என்று பெப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளருடன் கலந்துரையாடிய பின்னரே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYis4.html
தமிழக மீனவர்களின் விடுதலை. மனதுக்கு இதம் தரும் நிகழ்வு!- பாரதீய ஜனதாக்கட்சி
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 02:52.36 PM GMT ]
தமிழக மீனவர்கள் இலங்கையால் விடுவிக்கப்பட்ட நிகழ்வு, மனதுக்கு இதம் தரும் நிகழ்வு என்று பாரதீய ஜனதாக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த நிகழ்வு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்றும் அந்தக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியின் ஊடாக கலந்துரையாடியதன் பின்னாலே இந்த வாய்ப்பு ஏற்பட்டதாக பாரதீய ஜனதாக் கட்சியின் பேச்சாளர் ஜிவிஎல் நரசிம்மராவ் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த தமிழக மீனவர்களை விடுவித்த பெருமை இந்திய மத்திய அரசாங்கத்தை சேரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த மீனவர்களின் விடுதலை ஒருப்பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் மறுபக்கத்தில் கவலையை அளிப்பதாக முன்னாள் காங்கிரஸ்வாதி ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
தொழிலுக்காக சென்ற அவர்கள், போதைப்பொருள் வைத்திருந்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை உண்மையில் கவலைக்குரிய விடயம் என்ற வாசன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYis3.html
Geen opmerkingen:
Een reactie posten