தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 11 november 2014

மகிந்தவிற்கு ஆதரவு! கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவினை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்து, ஶ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் டியூ.குணசேக்கர, நேற்றைய மத்திய குழுக் கூட்டத்தில் முன்வைத்த ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் யோசனைக்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
ஒருவர் மாத்திரம் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்காத நிலையிலும், அதற்கு ஜனாதிபதி பொறுப்புக் கூறாத நிலையிலும் ஜனாதிபதியை ஆதரிப்பது நியாயமல்ல என எதிரணியினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கட்சிக்குள் முரண்பட்டிருக்கும் இவர்கள் மாதுளுவாவ சோபித தேரரின் நிலைப்பாட்டில் நின்று அவரை ஆதரிக்கப் போவதாகவும் தெரிய வருகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnpz.html

Geen opmerkingen:

Een reactie posten