தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 13 november 2014

மகளிர் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்த மாணவர்கள்!

பாப்பாண்டவர் பிரான்ஸிசை சந்தித்த இலங்கையின் முக்கியஸ்தர்

கொட்பிரீ யோகராஜன் மற்றும் பிரதிநிதிகள், பாப்பாண்டவரை சந்தித்து இலங்கையில் கிறிஸ்தவ மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். தேசிய கிறிஸ்தவ மதப்பரப்புரைச் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் யோகராஜன் கடமையாற்றி வருகின்றார்.
கிறிஸ்தவ மக்களின் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கி வரும் அடக்குமுறைகள் குறிப்பாக இலங்கையில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/86685.html

மகளிர் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்த மாணவர்கள்! 

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. குறித்த விடுதி பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாக தெரிவித்து நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவுக்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
எனினும் மாணவியர் விடுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும், வெளியார் யாரும் அத்துமீறி பிரவேசிக்க முடியாத வகையில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகவும் உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக நிர்வாகமும் வலியுறுத்தியிருந்தன.
இந்நிலையில் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக மாணவியர் விடுதிக்குள் நுழைந்திருந்த நிலையில் நிர்வாகத்திடம் மாட்டிக் கொண்டுள்ளனர். தற்போது அவர்கள் கற்றல் நடவடிக்கைகளிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களை தனது அறைக்கு வரவழைத்த மாணவிக்கும் விடுதி வசதி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/86688.html

Geen opmerkingen:

Een reactie posten