தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 16 november 2014

எதிர்க்கட்சிகளின் இரட்சகர்களாக புலம்பெயர் தமிழர்கள்: ஜனாதிபதி!

பெண் பொலிஸ் அதிகாரி வீட்டில் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நபர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 12:45.31 PM GMT ]
பெண் பொலிஸ் பரிசோதகர் வீட்டில் மூன்று லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்டி, குண்டசாலை பொலிஸ் போக்குவரத்து பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் பொலிஸ் பரிசோதகரின் குருதெனிய கிரிமெட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டிலே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
3 லட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தலாத்துஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYku0.html
பாப்பரசரின் வருகை! கொழும்பு நகரின் பாதுகாப்புக்கு 9 மில்லியன் செலவு
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 12:54.23 PM GMT ]
புனித பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 9 மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளது.
தெட்டகொடை, ஒருகொடவத்தை வெல்கடைவத்தை ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கும் வகையில் பாதுகாப்பு கமெராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இதனைத் தவிர காலிமுகத்திடல் சுற்று வட்டம், பழைய நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதிகளின் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கெமராக்கள் நவீனமயப்படுத்தப்பட உள்ளன.
அத்துடன் கொழும்பு நகரில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் பொலிஸ் கார்களில் ஜீ.பி.எஸ் கருவிகள் மற்றும் பாதுகாப்பு கமெராக்கள் பொருத்தப்பட உள்ளன.
டிசம்பர் மாத முடிவுக்குள் இந்த பணிகள் நிறைவு செய்யப்படும் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
2016ம் ஆண்டுக்குள் கொழும்பு உட்பட்ட பல நகரங்களில் கண்காணிப்பு கமெராக்கள்
பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு ஜனவரி மாதத்தில் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண இதனை இன்று அறிவித்துள்ளார்.
இதன்படி பேஸ்லைன் வீதியின் ஊடாக தெமட்டகொட ஒருகொடவத்த மற்றும் மெகசின் சிறைச்சாலை வரையில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
பழைய நாடாளுமன்ற சுற்றுவட்டம், காலி முகத்திடல், ஆகிய இடங்களின் கண்காணிப்பு கமெராக்கள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன.
இதன்மூலம் கொழும்பு நகரத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையாக கண்காணிப்பு கமெராவுக்குள் கொண்டு வரப்படவுள்ளதாக அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
பேலியகொட பாலம், களனி பாலம் ஆகிய இடங்களில் விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக 9 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவுள்ளன.
இதேவேளை சுமார் 800 மில்லியன் ரூபா செலவில் கொழும்பின் அனைத்து பாதைகளிலும் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்படவுள்ளன.
அத்துடன் அநுரதபுரம், காலி, கண்டி, கேகாலை போன்ற இடங்களிலும் 2016ஆம் ஆண்டுக்கு முன்னர் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்படவுள்ளதாக அஜித் ரோணெ தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYku1.html
பொது வேட்பாளர் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டவர் அல்ல: விமல் வீரவன்ஸ
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 01:11.34 PM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டவர் இல்லை என்பதை வேட்புமனு தாக்கல் செய்யப்படும் போது அறிந்து கொள்ளலாம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வீரவன்ஸ, பொது வேட்பாளர் அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டவர் என பொய்யான வதந்திகள் பரப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 20 வருடங்களாக நிறைவேறாத ஆசை உள்ளது. அந்த ஆசையை நிறைவேற்ற ரணிலுக்கும் கருவுக்கும் ஆசையாகவும் பயமாகவும் உள்ளவர்கள் போல் பொது வேட்பாளராக முயற்சிக்கின்றனர்.
ரணிலுக்கு அவர்தான் பொது வேட்பாளராக என்பது அவருக்கே தெரியாது. கருவுக்கும் தெரியாது. சோபித தேரருக்கும் தெரியாது.
வேட்புமனு தாக்கல் செய்யும் போது முழு நாடும் அறிந்து அந்த வேட்பாளரை அறிந்து கொள்ளும் எனவும் விமல் வீரவன்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYku2.html


எதிர்க்கட்சிகளின் இரட்சகர்களாக புலம்பெயர் தமிழர்கள்: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 01:20.04 PM GMT ]
பொது வேட்பாளர் யார் என்பதை தெரிவு செய்ய முடியாது எதிர்க்கட்சிகளின் கூட்டணி இசை நாற்காலி போட்டியை நடத்தி வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
12 ஆயிரம் பேருக்கு காணி உறுதியை வழங்கும் நிகழ்வு குருணாகல் மாளிகா மைதானத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
கடந்த முறை ஜனாதிபதியாக தெரிவான நாள் முதல் நான் ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகி வருகிறேன்.
எதிர்க்கட்சிகளுக்கு தயாராக காலத்தை வழங்கவே முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தல் பற்றி அறிவிக்கப்பட்டது.
எமது பிக்கு ஒருவரும் இசை நாற்காலியில் அமர இசை ஒலிப்பரப்பு செய்து சுற்றி வருகிறார்.
எதிர்க்கட்சிகளின் மிகப் பெரிய இரட்சகர்களாக புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர்.
நாட்டில் நடக்கும் சாதாரணமான சம்பவங்களை பெரிதுப்படுத்தி வெளிநாடுகளுக்கு காட்ட இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
அரபு புரட்சியை பற்றி பேசுகின்றனர். ஆனால் அதனால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்படட கொடூரமான கொலைகள் பற்றி அவர்கள் பேசுவதில்லை.
இது குறித்து நாட்டில் உள்ள முஸ்லிம் தலைவர்களும் அமைதியாகவே இருந்து வருகின்றனர்.
இனவாத, மத வாத மற்றும் குலவாத பேதங்களை ஏற்படுத்தி யுத்தத்தில் செய்ய முடியாமல் போனதை செய்ய முயற்சிப்பதுடன் அமைதியாக இருக்கும் மக்களை தூண்ட முயற்சிக்கின்றனர் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYku3.html

Geen opmerkingen:

Een reactie posten