தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 11 november 2014

கஜதீபன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களை அச்சுறுத்திய ஈ.பி.டி.பியினர்!

ரத்தன தேரரின் முகநூல் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் முடக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 03:14.44 PM GMT ]
ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் முகநூல் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் மீது ஊடுருவல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று இந்த ஊடுருவல் இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது ஊடுருவல் நிறுவனங்களால் அல்ல. தனிப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரத்தன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது கணக்குகள் ஊடுருவப்பட்டு அவை முடக்கப்பட்டுள்ளதாகவும் ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதியை முறையை ஒழிக்கும் 19வது அரசியல் அமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ரத்தன தேரர் பிரசாரத்தை தீவிரமாக முன்கொண்டு செல்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYntz.html
ரணில் போட்டியிடாவிட்டால் சுனேத்திரா அல்லது மைத்திரி
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 03:45.15 PM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடாவிட்டால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் சகோதரி - சுனேந்திரா பண்டாரநாயக்க அல்லது ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரில் ஒருவர் பொதுவேட்பாளராக போட்டியிடும் திட்டம் ஒன்றும் வெளியாகியுள்ளது.
நேற்று கொழும்பு பீச்வெலி விருந்தகத்தில் இடம்பெற்ற இரவு விருந்துபசாரம் ஒன்றின்போது இது தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
இரண்டு பெண்களும் பொதுவேட்பாளர் நிலைக்கு பொருத்தமானவர்களாக இருப்பர் என்று இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
மைத்திரி விக்ரமசிங்கவும் சுனேத்திரா பண்டாரநாயக்கவும் கடுமைவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரினதும், ஐக்கிய தேசியக் கட்சியினரினதும், ஆதரவை திரட்டக்கூடியவர்கள்,
அத்துடன் சிறுபான்மையினரிடம் வாக்குகளுக்காக கோரிக்கைகளை விடுக்கக்கூடியவர்கள்,
அத்துடன் பெண்கள் மத்தியிலும் அவர்கள் இருவரும் வாக்குகளை சேகரிக்கக்கூடியவர்கள்.
இந்தநிலையில் குறித்த இருவரும் நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பதவிக்கு வந்து 6 மாத காலப்பகுதிக்குள் நிறைவேற்று அதிகாரங்களை ஒழிப்பது என்று இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnt0.html

கஜதீபன் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களை அச்சுறுத்திய ஈ.பி.டி.பியினர்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 02:46.07 PM GMT ]
வடமாகாண விவசாய அமைச்சினால் நவம்பர் மாதம் மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மரநடுகை விழாவும், மாணவர்களுக்கான மரக்கன்றுகளை விநியோகிக்கும் நிகழ்வும் இன்று பி.ப 5 மணியளவில், ஊர்காவற்றுறை தொகுதி சரவணைப் பகுதியில் நடைபெற்றது.
திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்ததுடன் மர நடுகையிலும் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் ஜெயபாலன், ஆசிரியர்கள் ஜஸ்ரின், டிஹால், மாணவர்கள் ஊர்ப் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்தநிகழ்வினை நிறைவு செய்துவிட்டு மாகாணசபை உறுப்பினர் திரும்பிய பின் அப்பகுதிக்கு ஆட்களுடன் சென்ற வேலணைப் பிரதேச சபையின் தலைவரான ஈ.பி.டி.பியைச் சேர்ந்த சிவராசா (போல்), பிரதேச மக்களுடன், தம்மை நிகழ்வுக்கு அழைக்கவில்லை எனவும், கூட்டமைப்பினரை அழைத்து நிகழ்வு நடத்தியமை குறித்து மக்களுடன் முரண்பட்டுள்ளார்.
அத்துடன் அவர்களை அச்சுறுத்தியதுடன், மிரட்டும் பாணியில் செயற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnty.html

Geen opmerkingen:

Een reactie posten