தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 november 2014

புலிகளின் போர்க்குற்றங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அதிகாரம்?

ரணிலின் கோரிக்கையை ஏற்க மறுத்த சந்திரிக்கா
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 07:10.30 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிராகரித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனக்கு பதிலாக பொது வேட்பாளராக நிறுத்துமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரின் பெயரை சந்திரிக்கா பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேன போட்டியிட உள்ளதாக பேசப்படுவதால், அதில் உண்மை இருக்கின்றதா என ஊடகவியலாளர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சிறிசேன இப்படியான கதைகள் சமூகத்தில் பேசப்படும் கதைகள் மாத்திரமே எனக் குறிப்பிட்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlqy.html


தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையை கட்டி எழுப்புங்கள்! அபிவிருத்திகளோடு நாங்கள் வருகின்றோம்: பா.டெனிஸ்வரன்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 07:19.51 AM GMT ]
தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையை கட்டி எழுப்புங்கள் அபிவிருத்திகளோடு நாங்கள் வருகின்றோம் என வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் தாராபுரம் கிராமத்தில் நேற்று காலை 9:30 மணியளவில் ஆரம்ப தாய் சேய் சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அல்ஹாஜ் ரிப்கான் பதியுதீன் அவர்களின் அழைப்பின் பேரில் கலந்து கொண்ட  டெனீஸ்வரன் தனது உரையில் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அல்ஹாஜ் ரிப்கான் பதியுதீன் அவர்களும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் திருமதி சிசில் அவர்களும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் திரு ரூபன் அவர்களும் மற்றும் கிராமத்தலைவர்கள் கிராம மக்கள் வைத்தியர்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlq0.html
புலிகளின் போர்க்குற்றங்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அதிகாரம்?
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 08:08.51 AM GMT ]
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு ஏதுவாக இந்த ஆணைக்குழுவுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் கெசட் அறிவித்தல் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி உருவாக்கப்பட்டிருந்தது. விசாரணை ஆணைக்குழுக்கள் தொடர்பான அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 393ன் இரண்டாம் உப பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2014.07.15ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த ஆணைக்குழுவுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. நாளை முதல் அந்த அதிகாரங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டு, ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரம் பொருந்திய ஆணைக்குழுவாக மாற்றப்படுகின்றது.
தற்போது ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரத்தின் பிரகாரம்,
1. இறுதி யுத்தத்தின் போது தனிநபர் அல்லது குழுக்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளனரா என்று விசாரணை மேற்கொள்வது
2. குறித்த போர்க்குற்றங்கள் தற்செயலாக நிகழ்ந்தவையா? வேண்டும் என்றே நிகழ்த்தப்பட்டவையா? மற்றும் அவை போர்க்குற்றங்கள் என்ற வரையறைக்குள் வருமா? என்பது தொடர்பான விசாரணை
3. இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச விதிமுறைகள் மற்றும் அவற்றை இலங்கை ராணுவத்தினர் மீறியுள்ளனரா?
4. அரச தரப்பு அல்லாத வகையில் விடுதலைப் புலிகள் சர்வதேச சட்டங்களை மதித்து போரில் ஈடுபட்டிருந்தனரா?
5. இறுதிப் போரின் போது விடுதலைப் புலிகள் பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்திய விடயம், இதன் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்
6 சர்வதேச நெறிமுறைகளுக்கு புறம்பாக சிறார் போராளிகளை படையில் இணைத்துக்கொண்ட சம்பவங்கள்
7. விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்கள் மற்றும் அதன் மூலம் அவர்கள் அடைந்த பொருளாதார மற்றும் ஏனைய அனுகூலங்கள்
8. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அல்லது அவருக்காக நேரடியாகச் செயற்பட்ட தரப்பினரின் கட்டளைப்படி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் சிறார் போராளிகளின் தாக்குதல்கள் என்பன சர்வதேச போர்விதிகளை மீறியுள்ளனவா? எந்த வகையில் மீறியுள்ளன?
போன்ற விடயங்களை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் அதிகாரம் காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பான விடயங்களில் ஆணைக்குழு புதிய விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.
குறித்த விடயங்கள் தொடர்பில் தகவல்கள், முறைப்பாடுகள் அல்லது சாட்சியமளிக்க விரும்புவோர் அது தொடர்பில் 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னராக தமக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் சாட்சிகள் வேண்டுகோள் விடுத்தால் இரகசியமாக சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlq3.html

Geen opmerkingen:

Een reactie posten