[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 07:17.08 AM GMT ]
நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வசந்த சேனநாயக்க தற்போதைக்கு கம்பஹா மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மீரிகம தொகுதியின் இணை அமைப்பாளராகவும் உள்ளார்.
தெதிகம தொகுதி வசந்த சேனநாயக்கவின் முப்பாட்டனும் முன்னாள் பிரதமருமான டீ.எஸ். சேனநாயக்க காலத்தில் இருந்து சேனநாயக்கவினர் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியாகும்.
எனினும் இந்தத் தொகுதியை ஏற்றுக் கொள்வது தொடர்பில் வசந்த இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
பெரும்பாலும் அவர் இன்று அல்லது நாளைக்குள் ஆளுங்கட்சியை விட்டு விலகும் தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாகவும் வசந்த சேனநாயக்கவுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiv6.html
பேஸ்புக் விமர்சனத்தால் சுகவீனமடைந்த பாடசாலை அதிபர்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 06:59.54 AM GMT ]
பாடசாலை அதிபர் ஒருவர் முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியைப் பார்த்த பின் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நாவலப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.
நாவலப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை இழிவுபடுத்தி முகப்புத்தகத்தில் செய்தி தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று இதனைப் பார்த்த அவ்வதிபருக்கு உயர்குருதியமுக்க நோய் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ள சிலர், அங்கிருந்த ஆசிரியர் ஒருவரை கடுமையாகப் பேசி, அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து,குறித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அமைதியற்ற நிலைமை உருவாகியுள்ளது.
இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து, அவர்கள் நேற்று நாவலப்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பிலும், நாவலப்பிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiv5.html
Geen opmerkingen:
Een reactie posten