[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 07:47.13 AM GMT ]
பிள்ளையின் தந்தை இலங்கையில் வாழ்ந்து வருவதால், அதனை தந்தையிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.
குழந்தைகள் கடத்திச் செல்லப்படுவது தொடர்பான ஹேக் இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ள ஜப்பான் ஊடகங்கள், இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஜப்பானில் வழங்கப்பட்ட முதலாவது தீர்ப்பு இதுவெனவும் குறிப்பிட்டுள்ளது.
பிள்ளையின் பெற்றோர் ஜப்பானிய பிரஜைகள் என்பதுடன் தந்தை சட்டத்தரணியாவார்.
இவர்கள் குடும்பத்துடன் 2013ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இலங்கையில் வசித்து வந்துள்ளதுடன் தாய் கடந்த ஜூன் மாதம் மீண்டும் ஜப்பான் திரும்பினார். குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்ற அவர் மீண்டும் இலங்கைக்கு வரப்போவதில்லை என கூறியுள்ளார்.
பிள்ளை இலங்கை பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளது. இதனால் கல்வியை தொடர்வதற்காகவும் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொண்டு பிள்ளையை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேவையெனில் தாய் இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiw0.html
20 அமைச்சர்கள் ஜனாதிபதியை தோற்கடிக்க ஆதரவளித்து வருகின்றனர்!– ஐ.தே.க
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 07:35.07 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடக் கூடிய வல்லமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு காணப்படுகின்றது.
எனினும், கூட்டணியாக இணைந்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பை மேலும் அதிகரிக்கும்.
அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்து வரும் 20க்கும் மேற்பட்டவர்கள் ஜனாதிபதியை தோற்கடிக்கப்பதற்கு முயற்சிக்கின்றனர் என அஜித் பெரேரா சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, களுத்துறை மாவட்ட ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்ள முற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு தரப்பிலிருந்தும் கட்சித்தாவல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiwz.html
ஐ.நா, அமெரிக்கத் தலையீடுகளுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 07:21.13 AM GMT ]
தேசாபிமான தேசிய முன்னணி (தேசமாமக ஜாதிக பெரமுன) இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த அமைப்பின் தலைவர் அகுலுகல்லே ஜினாநந்தே தேரர் தலைமையிலான ஆர்ப்பாட்டம், விகாரமஹா தேவி விகாரையின் புத்தர் சிலை அருகே இன்று காலை ஆரம்பமானது.
பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் நோக்கி ஊர்வலம் புறப்பட்ட போது, பெருந்தொகையான பொலிசார் ஊர்வலத்துக்குப் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக ஹவ்லொக் வீதி, கொழும்பு கறுவாத்தோட்டப் பகுதிகளில் நண்பகல் வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiv7.html
Geen opmerkingen:
Een reactie posten