நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதிக்கே நீக்க முடியாது: நிமால் சிறிபால - ஜனாதிபதி ஏற்கனவே தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 03:37.27 PM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிறைவேற்று கொண்ட ஜனாதிபதி முறைமையை பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாற்ற முடியும்.ஆனால் அவ்வாறான ஒரு தேவை எமக்கு இல்லை.
உண்மையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என எதிரணியினர் நினைத்தால் பாராளுமன்ற தெரிவு குழுவுக்கு வந்த தமது அபிபிராயங்களை முன்வைக்கலாம்.
எதிரணியினர் கூறுவது போன்று இலகுவாக நிறைவேற்று அதிகாரத்தை நீக்கி வேறு ஒருமையை கொண்டுவர முடியாது.
இந்த ஆட்சி முறை அரசியல் யாப்புடன் தொடர்புபட்டதாக காணப்படுகின்றது. எனவே அர்த்தமற்ற கதைகளை எதிரணியினர் கூறுவது பொருத்தமற்றதாகும்.
அதை விடுத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கம் வேண்டும் என கூறுவது சிறுபிள்ளைத்தனமானது.
இதேபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாக போட்டியிட முடியாது என மக்கள் விடுதலை முன்னணியினால் கூறமுடியாது.
இதனை மக்களிடம் கூறலாம் ஆனால் தேர்தல் திணைக்களத்திடம் கூறமுடியாது. அவ்வாறு கூறினாலும் திணைக்களம் அதனை கணக்கில் கொள்ளாது.
ஜனாதிபதி மூன்றாவது தடவையாகவும் போட்டியிடலாம் என உயர் நீதிமன்றம் வழங்கிய சட்ட ஆலோசனையை பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஏற்கனவே தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார் – ஜகத் புஸ்பகுமார
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்கனவே தேர்தலில் வெற்றியீட்டியுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கான 50 வீத பணிகள் பூர்த்தியாகியுள்ளன. ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.
தேர்தல் எப்போது நடத்தப்பட வேண்டும் என்பதனை தேர்தல் ஆணையாளரே தீர்மானிக்க வேண்டும்.
வேறு எவரும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய திகதியை நிர்ணயிக்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjs1.html
ஆட்சியில் குறைபாடுகள் இருந்தாலும் ஜனாதிபதிக்கே ஆதரவு!- அமைச்சர் விதாரண
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 03:41.27 PM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு எமது கட்சி தீர்மானித்துள்ளது.
இந்த அரசாங்கத்தில் பல குறைபாடுகள் உள்ளன என்பதை ஏற்று கொள்கின்றோம். எனினும் நாட்டை முன்னேற்ற பாதையில் இந்த அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது.
எனவே ஜனாதிபதிக்கே எமது ஆதரவை வழங்குகின்றோம்.
நாட்டில் ஊழல் மோசடிகள் குறித்து பேசப்படுகின்றது. செலவந்த தரப்புக்களுடன் இணைந்து அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது ஊழல் மிகுந்த நிலைமை உருவாக சாத்தியம் உள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியாவிலும் இந்த நிலைமையை நாம் காணுகின்றோம்.
அதனால் தான் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் தூக்கியெறிப்பட்டது.
இந்நாட்டின் முற்போக்கு சக்திகளுடன் இணைந்து அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்தவினால் மாத்திரமே முடியும்.
எனவே அவரை மீண்டும் அவரை கொண்டுவர ஒத்துழைப்பு வழங்குவோம்.
எதிரணி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என கூறுகின்றது.
ஆனால் அவர்களிடம் அதற்கான உண்மையான நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.
அதனால் மக்கள் மத்தியில் பொது வேட்பாளர் தொடர்பில் நம்பிக்கையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjs2.html
Geen opmerkingen:
Een reactie posten