[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 09:32.01 AM GMT ]
இவ்வாறு வரி செலுத்துவதானது அந்த வர்த்தகங்களை நடத்துவதற்கு சட்டரீதியான அனுமதியை வழங்குவதாகும்.
கசினோவுடன் தொடர்புடைய5 வர்த்தகங்களும், குதிரை பந்தய வர்த்தகம் தொடர்பில் 3 முகாவர்கள் ஊடாக 12 பந்தய நிலையங்களும், நேரடி ஒளிப்பரப்புடன் கூடிய 884 பந்தய நிலையங்களும் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் நிதியமைச்சு இந்த தகவலை வழங்கியுள்ளது.
அத்துடன் சூதாட்ட வர்த்தகத்திற்காக விசேட அனுமதிகள் பெறப்பட வேண்டியதில்லை எனவும் தேசிய இறைவரி சட்டத்தின் கீழ் செயற்படுவது போதுமானது எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் தேசிய இறைவரி சட்டமூலத்தில் விதிக்கப்பட்டுள்ள தடைக்காரணமாக சூதாட்டம் மற்றும் பந்தய வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmt3.html
கொலை குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 09:34.26 AM GMT ]
28 வயதான திருமணமான நபரை வெட்டிக்கொலை செய்த குற்றத்திற்கான இந்த நபர்களுக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனமடுவ பெரியகுளம் பிரதேசத்தை சேர்ந்த மான்ன பிச்சைகே டெனி மற்றும் சுனில் ஜயசிங்க ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த கொலை குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
1998 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில் இந்த கொலை நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றியதால் இந்த கொலை நடந்தாக விசாரணைகளில் தெரியவந்தது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmt4.html
நுவரெலியாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்கும் தகுதியை இழக்கும் ஆபத்து
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 09:45.10 AM GMT ]
உதவி தேர்தல் ஆணையாளரின் அலுவலகத்திற்கு கிடைத்துள்ள பல வாக்காளர் பட்டியல்களில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பலரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளடக்கப்படவில்லை அந்த மாவட்ட அரசாங்க அதிபர் டி.பி.ஜி. குமாரசிறி தெரிவித்துள்ளார்.
தேசிய அடையாள அட்டை அல்லது வேறு அடையாள ஆவணங்கள் இன்றி தேர்தலில் வாக்களிக்க முடியாது. இதனால் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் எனவும் குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த முறையும் இவ்வாறு அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
நுவரெலியா மாவட்டத்தில் சீ.டிகளை வாடகைக்கு பெறும் போதும் தங்க ஆபரணங்களை அடகு வைக்கும் போதும் அவற்றை திரும்ப பெறும் வரை பணயமாக அடையாள அட்டைகள் பெறப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmt5.html
கொலைக்களமாகும் தமிழர் கடல்: ஆவணப்படம்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 09:59.29 AM GMT ]
கொன்று குவிக்கிறது இலங்கை கடற்படை. கை குலுக்கி உறவு காக்கிறது இந்தியா. இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்தால் கூட அடி தமிழ் மீனவன் தான் சாகிறான். நமது மீனவர் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக நம் மீனவன் கடலில் கொல்லப்படுகிறான். இது இனப்படுகொலையின் தொடர்ச்சியே. இந்த இனப்படுகொலையில் இந்தியா கொலையாளியுடன் கைகோர்ப்பது ஏன்?
உயிரைப்பணயம் வைத்து நமக்கு உணவளிக்கும் மீனவர் உயிர்காக்க ஒன்று கூடுவது நம் அனைவரின் கடமை.
எட்டு தமிழ் மீனவர் (5 தமிழக மீனவர்+3 ஈழத்தமிழர்) ஆகிய நம் உழைக்கும் தமிழர்கள் உயிர் காப்பதும், உரிமை மீட்பதும் அவர்கள் நமக்கிட்ட உணவின் மீது நாம் செலுத்தும் ஒரு நன்றிக்கடனே.
மீனவர் விடுதலையை மட்டும் நாம் கோரவில்லை. மீனவரை படுகொலை செய்த இலங்கைப் படையினரை கைது செய்திருந்தால் இந்த கொடுமைகள் நிகழாது போயிருக்கும்.
கடமை மறந்த இந்திய அரசினை கேள்விக்குள்ளாக்குவது தலைநகரில் வாழும் நம் அனைவரின் அரசியல் கடமை.
நம் மீனவனுக்கு நீதி கேட்க ஒரு நாள் கூட மாட்டோமா நாம்? நவம்பர் 16 காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் கூடுவோம். தமிழர் கடலை பாரம்பரிய மீன்பிடி பகுதியாக அறிவி. மீன்பிடி உரிமையை உறுதி செய். சிங்கள கடற்படை தளபதிகளை கைது செய்.
மே பதினேழு இயக்கம்
May 17 Movement
May 17 Movement
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmt6.html
Geen opmerkingen:
Een reactie posten