zaterdag 15 november 2014

ஜனாதிபதி தரப்பினர் சோபித தேரரை அச்சுறுத்தவில்லை: அரசாங்க ஊடகம்

ரத்னசிறிக்கு எதிராக ஆளுங்கட்சியின் ஊடகப் பிரச்சாரம் ஆரம்பம்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 10:50.24 AM GMT ]
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவுக்கு எதிரான ஊடகப் பிரச்சாரங்களை தீவிரப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது அபேட்சகராக களமிறங்கத் தகுதியானவர்கள் பட்டியலில் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ஜே.வி.பி. மற்றும் ஏனைய கட்சிகள் பலவும் கரு ஜயசூரியவை விடவும் ரத்னசிறி தொடர்பில் அதிக விருப்புடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக பெரும்பாலும் எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டணி வேட்பாளராக ரத்னசிறி விக்கிரமநாயக்க களமிறங்கும் சாத்தியம் அதிகரித்துள்ளது.
எனினும் ஹொரணையில் நடைபெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிலும் அவர் இன்று கலந்து கொண்டிருந்தார்.
இதற்கிடையே இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ரத்னசிறிக்கு எதிரான தீவிர ஊடகப் பிரச்சாரத்தை முன்னெடுக்க ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
பொது அபேட்சகராக அவர் களமிறக்கப்படும் பட்சத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான தகவல்களை ஊடகங்கள் வாயிலாக கசிய விடவும் அரச தரப்பு தீர்மானித்துள்ளது.
இதற்கென துமிந்த சில்வா குடும்பத்தின் ஹிரு ஊடக வலையமைப்பு மற்றும் மவ்பிம பத்திரிகைகளை பயன்படுத்திக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYko6.html
ஜனாதிபதி தரப்பினர் சோபித தேரரை அச்சுறுத்தவில்லை: அரசாங்க ஊடகம்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 11:23.20 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் சோபித தேரரை அச்சுறுத்தியதாக கூறப்படுவது பொய்யான தகவல் என்று லங்காபுவத்  தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் வீட்டுக்கு அண்மையில் ஜனாதிபதி மஹிந்த, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய, அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஆகியோர் அண்மையில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு அழைத்துவரப்பட்ட மாதுளுவாவே சோபித தேரரை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் கடுமையாக அச்சுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் அவர் திடீர் சுகவீனமுற்று தற்போது மாலபே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
எனினும் இந்தச் சம்பவத்தை அரசாங்கத்தின் ஊதுகுழலான லங்காபுவத் செய்திச் சேவை மறுத்துள்ளது.
அவ்வாறான ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்று சோபித தேரரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக லங்காபுவத் அநாமதேய நபரின் பெயரில் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் சோபித தேரர் மதக்கிரியைகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட அசதியினால் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், இரண்டொரு நாளில் அவர் குணமடைந்து இயல்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றும் லங்காபுவத் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYko7.html

Geen opmerkingen:

Een reactie posten