[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 01:03.29 AM GMT ]
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, மகிந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவராக இருப்பார் என்று நாமும் நாட்டின் ஜனாதிபதியும் நினைத்திருந்த போது, ஜனாதிபதி மகிந்தவின் அரசில் சுகாதார அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பது இந்த ஆண்டு நம் நாட்டு அரசியலில் நடந்த மிக உன்னதமான அதிர்ச்சிச் செய்தி எனலாம்.
எவருமே எதிர்பார்க்காத வகையில் மைத்திரியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதென்று எதிர்க்கட்சிகள் அறிவித்திருப்பதானது, அரசியலில் ஆர்வம் குன்றிக் கிடந்த சாதாரண மக்களையும் துள்ளி எழும்ப வைத்துள்ளது.
அந்த வகையில் நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தல் சூடு கிளப்பும் என்பது நிறுத்திட்டமான உண்மை.
அதேநேரம் தேர்தல் வெற்றிக்காக எதுவும் நடக்கும் என்று எதிர்வு கூறுவதிலும் தயக்கம் தேவையில்லை.
எதுவாயினும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள், எதிர்பார்ப்புகள் கடந்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து போட்டியிடக் கூடிய வேட்பாளரை தெரிவு செய்தமை எதிர்க்கட்சிகளிடையே இருக்கக் கூடிய வலுவான ஒற்றுமையைக் காட்டுகிறது.
ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அவரது சகோதரி சுனேத்திரா, சஜித் பிரேமதாச, கருஜெயசூரிய போன்றவர்களில் ஒருவரே பொது வேட்பாளராக வரக்கூடிய வாய்ப்பு உண்டு என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டு அந்தச் செய்தி ஊடகங்களிலும் இடம்பிடித்துக் கொண்டது.
இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நியமிப்பது என்ற தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் எடுத்திருந்தன.
எனினும் பரம இரகசியமாக அச்செய்தி பாதுகாக்கப்பட்டதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் அவரது குழுமத்தையும் திசை திருப்பும் வகையில், பொது வேட்பாளர் குறித்து வெவ்வேறு பெயர்கள் முன்மொழியப்பட்டு அவை பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.
இதன் காரணமாக மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக வருவார் என்று ஆளும் தரப்பு கனவும் கண்டில.
நிலைமை இவ்வாறு இருக்க, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஆளும் கட்சிக்குள் இருந்தமை மகா அதிசயமே.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, சபாநாயகராக அவரது சகோதரர் சமல் ராஜபக்ச. அடுத்த சகோதரர் பசில் ராஜபக்ச பொருளாதார அமைச்சர்.
தம்பி கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளர். மகன் நாமல் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர் என ஒரு பெரும் குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட மகிந்தவின் ஆட்சியில் ஒரு விபீஷணன் இருந்தமை அதிசயத்திலும் அதிசயம்.
வேட்பாளர் தெரிவில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுமா? தோல்வி காணுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgu1.html
மஹிந்தவை தோற்கடிக்க வேண்டும் என்பது பொதுக்கொள்கை! தீர்மானிக்க வேண்டியது மக்களே!- ஜே.வி.பி
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 12:54.48 AM GMT ]
நேற்றிரவு தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தடவையாக போட்டியிடும் இந்த தேர்தல் சட்டவிரோதமானது என்ற அடிப்படையில் அதில் வேட்பாளர் ஒருவரை பெயரிடுவதில்லை என்று ஜே.வி.பி ஏற்கனவே தீர்மானித்திருந்தது.
இந்தநிலையில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தற்போது எதிர்க்கட்சிகளின் சார்பில் பெயரிடப்பட்டுள்ளார்.
இதன்போது ஜே.வி.பி. யின் செயற்பாடு எவ்வாறு இருக்கும் என்று அவரிடம் கேட்டபோது மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை முடிவுறுத்தும் நிலைப்பாட்டை ஜே.வி.பி கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
எனவே இந்த விடயத்தில் மக்கள் தமது தீர்மானத்தை தாமே எடுக்கவேண்டும் என்பதே ஜே.வி.பியின் கொள்கை என்று அநுரகுமார கூறினார்.
மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க மக்கள் விரும்பினால் அது அவர்களின் தீர்மானமாக அமையும். எனினும் தமது கட்சி இவருக்கு வாக்களிக்கலாம் என்ற கோரிக்கையை மக்களிடம் முன்வைக்காது என்று அநுரகுமார குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgu0.html
நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் பாரிய கட்சி மாறல்கள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நாளை, இலங்கையில் பாரிய கட்சி மாறல் நிகழ்வு -கட்சிதாவல் தற்காலிக நிறுத்தம்: செவ்வாய் மீண்டும் தொடரும்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 01:07.55 AM GMT ]
2015ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தன் மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்புடன் இந்த கட்சி மாறல் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன்போது முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு செல்வர் என்று செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
இந்த செய்தியை ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்கவை கோடிட்டு செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.
இதேவேளை எதிர்க்கட்சியில் இருந்தும் பலர் நாளை அரசாங்கக் கட்சிக்கு மாறுவர் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கட்சிதாவல் தற்காலிக நிறுத்தம்! செவ்வாய் மீண்டும் தொடரும்
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை கட்சி தாவல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் தீர்மானி்த்துள்ளனர்.
நாளை நடைபெறவிருக்கும் வரவு செலவுத்திட்டத்தின் போது அரசாங்கத்தை தோற்கடித்து, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் உட்கார வைக்கும் திட்டமொன்று எதிர்க்கட்சிகளின் கூட்டணியிடம் முன்னர் இருந்தது.
எனினும் தற்போதைய நிலையில் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
அவ்வாறு நடந்தால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியிழக்க நேரிடும்.
இதனை கருத்தில் கொண்டு நாளைய வரவு செலவுத்திட்ட வாக்களிப்பின் போது அரசாங்கம் வெற்றிபெறும் வகையில் வாக்களிக்க அரசின் மீது அதிருப்தியுடன் இருக்கும் முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
எனினும் செவ்வாய் தொடக்கம் கட்சி தாவும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மூன்று பேர் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
இதற்கிடையே ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி தாவும் எண்ணத்தை கைவிடும் வகையில் வாகனம் மற்றும் பண அன்பளிப்புகளை வழங்க அரசாங்கத்தின் உயர்மட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது முன்னாள் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயக்க மற்றும் அவரது புதல்வருக்கு பெருந்தொகைப் பணம் கைமாற்றப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
எனினும் இவர்கள் இருவரும் அடுத்த வாரத்துக்குள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வது உறுதி என்றும் குறித்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgu2.html
பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கவும்! வைகோவை கைது செய்யவும்!- சுப்பிரமணிய சுவாமி
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 12:47.23 AM GMT ]
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ம.தி.மு.க. சார்பில் எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி தியாகத் திருநாள் பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம் சென்னையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தகைய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள வைகோவின் ம.தி.மு.க.வை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
வைகோவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இந்திய அரசியல் சட்டம் 256ன்படி மத்திய அரசின் நிர்வாக அதிகாரத்துக்குத் தடையாகவோ, பாரபட்சப்படுத்தும் வகையிலோ மாநில அரசின் நிர்வாகம் செயற்படக்கூடாது.
பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சுப்பிமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளதாக தி ஹிந்து செய்திவெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYguz.html
Geen opmerkingen:
Een reactie posten