vrijdag 14 november 2014

விடுதலைப் புலிகளின் தடை நீக்கத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதில்லை! ஜீ.எல்.பீரிஸ்

டுபாயில் இருந்து தங்க பிஸ்கட்களை மலவாயிலில் மறைத்து கடத்திய இருவர் மத்தளவில் கைது!
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 08:29.53 AM GMT ]
டுபாயில் இருந்து ஒருகோடியே 45 லட்சம் ரூபா பெறுமதியான 29 தங்க பிஸ்கட்களை மலவாயிலில் மறைத்து இலங்கைக்கு கடத்தி வந்த இருவர் மத்தள விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 6.45 அளவில் மத்தள விமான நிலையத்திற்கு வந்த FZ-551 என்ற இலக்க விமானத்தின் பயணிகளை சோதனை செய்தபோதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதானை மற்றும் கட்டுகஸ்தோட்டை பகுதிகளைச் சேர்ந்த 57 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
ஒருவர் ஒரு கிலோ 300 கிராம் நிறையுடைய 13 தங்க பிஸ்கட்களை மலவாயிலில் மறைத்து வைத்திருந்ததுடன், மற்றுமொருவர் ஒரு கிலோ 600 கிராம் நிறையுடைய 16 தங்க பிஸ்கட்களை மலவாயிலில் மறைத்து வைத்திருந்துள்ளார்.
இவர்கள் இருவரும் மலவாயிலில் 2 கிலோ 900 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்துள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. 
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlq4.html
ஜனாதிபதி தேர்தல் ஜனவரி 8 ஆம் திகதி: தயாராகும் தேர்தல் செயலகம்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 09:11.16 AM GMT ]
அவசரமாக நடத்தப்பட உள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக தேர்தல் செயலகம் தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் ஆணையாளர் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அந்த தினத்திற்கு ஏதுவான முறையில் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தின் சகல அதிகாரிகளினதும் பணி மற்றும் நேர அட்டவணை தயார்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி  தேர்தலை ஜனவரி 10 ஆம் திகதி நடத்தவே ராஜபக்ஷவினர் முன்னர் தீர்மானித்திருந்தனர்.
பாப்பரசரின் விஜயத்தை ஒத்திப்போட முடியாது என்பதால் ஜனவரி 3 ஆம் திகதி தேர்தலை நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் ஜனவரி 2 ஆம் திகதி தேர்தலை நடத்துவதே சுபமானது என சோதிடர்கள் கணித்து கூறியிருந்தனர்.
ஆனால், 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை என்பதால் முஸ்லிம்கள் அதனை எதிர்க்கலாம் என்பதால் 8 ஆம் திகதி வியாழக்கிமை நடத்துமாறு சோதிடர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதனடிப்படையில் ஜனவரி 8 ஆம் திகதி தேர்தலை நடத்த ஜனாதிபதி எண்ணியுள்ளார்.
எவ்வாறாயினும் 8 ஆம் திகதி என்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கிரக பலன்களுடன் ஒத்துபோகும் சுப தினம் அல்ல என தெரியவருகிறது.
எண் சோதிடத்தை அடிப்படையாக கொண்டு 8 ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டதாக பேசப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlq6.html
அதிபரைத் தாக்கிய ஆளுங்கட்சி அரசியல்வாதி: கெக்கிராவையில் சம்பவம்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 09:11.31 AM GMT ]
அநுராதபுரம் மாவட்டம், கெக்கிராவை பிரதேசத்தில் ஆளுங்கட்சி அரசியல்வாதியினால் தாக்கப்பட்ட அதிபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.
கெக்கிராவை நகரை அண்மித்துள்ள திப்பட்டுவெவ சிறுநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் வைபவம் ஒன்றுக்காக மாலைநேரம் வரை பாடசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவர்களில் கெக்கிராவை பிரதேச சபை உபதலைவர் சம்பத் ஹேரத் இன் மகனும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாலை நேரத்தில் பெய்த மழையில் நனைந்த படி மகன் வீடு திரும்பியது கண்ட பிரதேச சபை உப தலைவர் கடும் கோபத்துடன் பாடசாலைக்குச் சென்று அதிபரைத் தாக்கியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அதிபர் லலித் மதுசங்க தற்போது கெக்கிராவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பிரதேச சபை உப தலைவரை கைது செய்த பொலிசார், இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இதற்கிடையே பிரதேச அரசியல்வாதியின் தாக்குதலுக்குள்ளான அதிபருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கெக்கிராவ வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட 13 பாடசாலைகளின் அதிபர்கள் பணிகளைப் புறக்கணித்துள்ளனர்.
மேலும் இவர்கள் இன்று நண்பகல் வரை திப்பட்டுவெவ நகரில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlq7.html

ஹெல உறுமய மற்றும் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துரையாடல்? - லங்கா சமசமாஜக் கட்சியில் பிளவு
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 09:49.29 AM GMT ]
அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களிடையே இன்று முக்கியமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இன்று காலை நடைபெற இருந்த குறித்த கலந்துரையாடல் சில காரணங்களால் நண்பகல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
குறித்த கலந்துரையாடலில் எட்டப்படும் இணக்கப்பாட்டைப் பொறுத்தே ஆளுங்கட்சியில் தொடர்ந்தும் இணைந்திருப்பதா அல்லது அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதா என்ற முடிவை ஹெல உறுமயவினர் மேற்கொள்ளவுள்ளனர்.
எனினும் கலந்துரையாடலின் போது ஹெல உறுமயவின் நிபந்தனைகள் தொடர்பில் ஆளுங்கட்சியின் சார்பில் சாதகமான பதில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அலரி மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லங்கா சமசமாஜக் கட்சியில் பிளவு
பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என லங்கா சமசமாக் கட்சியின் தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளரான சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் தனிப்பட்ட மற்றும் அமைச்சு பதவிகளை பாதுகாத்து கொள்வதற்காக கட்சியின் மத்திய செயற்குழுவை தவறாக வழி நடத்தியுள்ளதாக தொழிலாளர் சங்க சம்மேளனத்தின் தலைவரும் கட்சியின் அரசியல் சபை உறுப்பினருமான டி.எம்.டி. அபேரத்ன நேற்று பி.பி.சி சிங்கள சேவையிடம் கூறியிருந்தார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஆரம்பகாலம் தொட்டு எதிர்த்த தலைவர்கள் இருந்த கட்சியின் இன்றைய செயற்பாடுகளுடன் இணைக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும் கட்சியின் பெரும்பாலானவர்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதால், அதற்கு எதிராக அறிக்கை விட எவருக்கும் அதிகாரம் இல்லை எனவும் பெரும்பான்மை நிலைப்பாட்டுக்கு அனைவரும் தலை வணங்க வேண்டும் எனவும் அமைச்சர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlry.html
மீரியபெத்தையில் மீண்டும் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள பகுதியில் ஆய்வு
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 10:09.29 AM GMT ]
மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள பகுதியில் மண்சரிவு தொடர்பான ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய கட்டட ஆய்வு நிறுவக உத்தியோகத்தர்கள் குறிப்பிட்ட பகுதியில் மண்சரிவு தொடர்பான ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார தெரிவித்தார்.
ஆய்வின் பின்னர் உடனடியாக அதுகுறித்து மாவட்ட செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அபாயம் நிலவியுள்ள பகுதிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே, தற்போது தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்படும் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
கொஸ்லாந்தை, மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு அபாயம் தோன்றியுள்ளதன் காரணமாக, 156 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் கொஸ்லாந்தை ஸ்ரீகணேசா தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் பிரதேச செயலகம், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlrz.html
விடுதலைப் புலிகளின் தடை நீக்கத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதில்லை! ஜீ.எல்.பீரிஸ்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 10:23.46 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கியமைக்கு மேன்முறையீடு செய்யப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்றத்தில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த தடை நீக்கத்துக்கு எதிரான மேன்முறையீடு செய்யப்படுமா? என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் போது ஜீ.எல்.பீரிஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
எனினும் தடைக்கு எதிராக மேன்முறையீடு ஒன்றை செய்து, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற விவாதத்தின் வாதியாக செயற்பட முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlr0.html

Geen opmerkingen:

Een reactie posten