zondag 16 november 2014

சவேந்திர சில்வாவுக்கு எதிரான சாட்சியமளித்தவரின் விபரங்கள் சேகரிப்பு!

ராஜபக்ச குடும்பம் அதிகார வெறிபிடித்தவர்கள்! சோமவங்ச அமரசிங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 11:18.45 PM GMT ]
ராஜபக்ச குடும்பத்தினர் அதிகார வெறி பிடித்தவர்கள் என்று, ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க விமர்சித்துள்ளார்.
அத்துடன் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள எந்தவொரு கீழ்த்தரமான வழிமுறையையும் ராஜபக்சவினர் கையாளத் தயங்காதவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட முக்கிய நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் இந்த நாட்டை அனைத்து வழிகளிலும் சீரழித்துவிட்டது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கடன்சுமை, அபிவிருத்தி என அனைத்திலும் அரசாங்கம் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றது.
இந்நிலையில் இந்நாட்டின் அரசியல் நிலையில் மாற்றம் உருவாக்கப்பட வேண்டும். ஜே.வி.பி.யின் பங்களிப்புடன் மாத்திரமே குறித்த அரசியல் மாற்றம் சாத்தியப்படும் என்றும் சோமவங்ச அமரசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkw0.html
சவேந்திர சில்வாவுக்கு எதிரான சாட்சியமளித்தவரின் விபரங்கள் சேகரிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 11:23.44 PM GMT ]
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சாட்சியமளித்தவரின் விபரங்கள் அரசாங்கத்தினால் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஐ.நா.வுக்கான இலங்கையின் துணை நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக தற்போது கடமையாற்றும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிக் கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரியொருவரும் ரகசியமான முறையில் ஜெனீவா மனித உரிமைகள் குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.
தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் குறித்த இராணுவ அதிகாரி தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் குறித்த நபர் இராணுவத்தில் பணியாற்றியவர் இல்லை என்றும், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அவர் வடக்குப் பகுதிக்கு சென்றதற்கான ஆதாரங்களும் இல்லை என்றும் அரசாங்கம் மறுத்துள்ளது.
அத்துடன் முன்னாள் இராணுவ அதிகாரி என்று சொல்லிக் கொள்ளும் குறித்த நபர், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkw1.html

Geen opmerkingen:

Een reactie posten