vrijdag 14 november 2014

சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையாரிடமும் திருட்டாம்!!!

ஆபாச காட்சி பரவ போலீஸ் அதிகாரி காரணம்! சரிதாநாயர் போலீசில் புகார்

அங்கு அவரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
கேரள மாநிலத்தில் தென் மண்டல ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் பத்மகுமார், முன்பு திருவனந்தபுரம் சரக ஐ.ஜி.யாக இருந்த போது தான் நான் கைது செய்யப்பட்டேன்.
அப்போது என்னிடம் இருந்து 7 செல்போன்கள், 2 லேப் டாப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை கோர்ட்டில் ஒப்படைக்கும் போது ஒரு லேப்டாப்பும், 4 செல்போன்கள் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டது. 3 செல்போன்களும், ஒரு லேப்டாப்பும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படவில்லை. அந்த லேப்டாப்பில் தான் என்னுடைய ஆபாச காட்சி இருந்தது.


எனவே அது வெளியில் கசிந்து வாட்ஸ்அப்பில் பரவ அப்போதைய போலீஸ் ஐ.ஜி. பத்மகுமார் தான் காரணமாக இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன். இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு மனுவில் கூறியுள் ளார்.Wumain
http://www.jvpnews.com/srilanka/86772.html

வட்டவளையில் 15 அடி பள்ளத்தில் பாய்ந்த டிப்பர்

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற வாகனமே இவ்வாறு வட்டவளை குயில்வத்தை பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி 15 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் டிப்பர ரக வாகனத்தின் சாரதி உட்பட இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.DeperDeper-01Deper-02

http://www.jvpnews.com/srilanka/86775.html

சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையாரிடமும் திருட்டாம்

கோவில் வீதியைச் சுத்தம் செய்வதற்காக கோவில் பாதுகாப்பாளர் இன்று வெள்ளிக்கிழமை காலை அதிகாலை 4.30 மணியளவில் வந்தபோது, உண்டியல் வைக்கப்பட்ட இடத்தில் இல்லாமையைக் கண்டு கோவில் நிர்வாகசபையினருக்கு தெரியப்படுத்தினார்.
இந்நிலையில், கோவில் நிர்வாகசபையினர் உண்டியலை தேடியபோது, பணத்தை எடுத்துவிட்டு வெற்று உண்டியல் கோவிலுக்கு அருகில் காணப்பட்டதாகவும் பணத்தை எடுத்துவிட்டு வெற்று உண்டியலை அவ்விடத்தில் விட்டுச்சென்றதாகவும் மேற்படி கோவில் தலைவர் பரசுராமன் தவராசா தெரிவித்தார்.
இக்களவு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இக்கோவிலில் கடந்த 06 மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறு களவு போயுள்ளதாகவும்; இக்களவு தொடர்பிலும் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.setandeStuden-01
http://www.jvpnews.com/srilanka/86780.html

Geen opmerkingen:

Een reactie posten