dinsdag 11 november 2014

மகிந்தரின் பாரிய மோசடி : எவ்வாறு அறிந்தது அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவு ?


அது என்னவென்றால், தமிழர்களை தாமே கப்பலில் ஏற்றி அனுப்புவது. இவ்வாறு அவர்கல் பல தமிழர்களை அவுஸ்திரேலியா நோக்கி, அனுப்ப ஆரம்பித்ததால் அன் நாடு பெரும் பதற்றத்தில் இருந்தது. இதனால் ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலியா இறங்கி வந்து, இலங்கையோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன் பிரகாரம், தமது கடல் பரப்பில் இருந்து ஏதாவது அகதிப் படகு புறப்பட்டால் தாம் அதனை மறிப்போம் என்று மகிந்தர் கூறியுள்ளார். அதுபோல ஒரு மாதத்தில் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகள் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் இதற்கு பிரதி உபகாரமாக, இலங்கைக்கு சப்போட் செய்து பேசவேண்டும் எனவும், மனித உரிமை விடையங்கள் தொடர்பாக சில நாடுகள் குறை கூறினால் , அவ்வேளைகளில் இலங்கையை காப்பாற்றவேண்டும் எனவும் மகிந்தர் கோரியுள்ளாராம். இதனை ஒரு வகையில் அவுஸ்திரேலியா ஒப்புக்கொண்டும் உள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கு இடையே, மகிந்தரின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள தமிழர் ஒருவர், அடிக்கடி யாழ் மற்றும் கொழும்பு சென்றுவருவது வழக்கம். இவர் ஆட்கடத்தலில் ஈடுபடும் ஒரு முக்கிய புள்ளி.
இவரை அவரது பாணியில்(படகில் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்ல) சிலர் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கடத்தல் முயற்சியில் இருந்து இன் நபர் சாதுரியமாக தப்பியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனை செய்ய பின் புலத்தில் இருந்தது அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினர் தான் என்று சம்பந்தப்பட்ட நபர், தனது நண்பர்கள் வட்டாரத்திற்கு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினர் இலங்கை சென்று மீண்டதும், பின்னர் தமது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தை பெரும் விசனத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அன் நாட்டு அரசை ஒரு முட்டாள்போல நடத்தியுள்ளார்கள் ராஜபக்சர்கள் என்பது தான் அன் நாட்டு அரசு கடுப்பாகியதற்கு காரணம் என்கிறார்கள். தமிழர்களை அவர்களே பிடித்து அவுஸ்திரேலியா அனுப்பிவிட்டு, பின்னர் அதனை அவர்களே தடுப்பதுபோல நாடகம் ஆடியும் உள்ளார்கள் என்ற உண்மை தற்போது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது. ஆனால் அன் நாட்டு அரசு கப் சிப்பாக இருக்கிறது. ஏன் என்றால் அகதிகள் பயம் தான் காரணம்.
இதேவேளை எவ்வாறு அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு ஓசை படாமல் வந்துசென்றார்கள் என்று ஆராய கோட்டபாய உத்தரவிட்டுள்ளார் என்ற செய்திகள், ஏர் போட் வட்டாரத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது என அதிர்வின் கொழும்பு நிருபர் தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1410.html

Geen opmerkingen:

Een reactie posten