தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 november 2014

பிசு பிசுத்துப்போன ஐஸ் கிறீம் போராட்டம்! கூட்டமைப்புக்கு எதிரான சுலோகங்கள்!

நாட்டில் போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரிப்பு
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 04:24.43 PM GMT ]
நாட்டில் போலி நாணயத் தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போலி நாணயத்தாள்களை புழக்கத்தில் விட்ட பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து, தடுத்து வைத்துள்ளனர்.
கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடும் போது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாணயத்தாள்கள் தொடர்பிலான விசேட குறியீடுகள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
போலி நாணயத்தாள்களை அடையாளம் காண பல்வேறு வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
நீர் இலக்கினை உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன.
இந்த வழிமுறைகளின் மூலம் போலி நாணயத்தாள்களை அடையாளம் காண முடியும்.
போலி நாணயத்தாள்கள் என அடையாளம் காணப்பட்டால் உடனடியாக அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXex5.html

பிசு பிசுத்துப்போன ஐஸ் கிறீம் போராட்டம்! கூட்டமைப்புக்கு எதிரான சுலோகங்கள்
[ திங்கட்கிழமை, 10 நவம்பர் 2014, 04:44.53 PM GMT ]
யாழ் மாவட்ட குளிர்பான உற்பத்தியாளர் சங்கம் எனத் தம்மைத் தானே கூறிக்கொள்ளும் சிலரினால் இன்று நண்பகல் யாழ் நகரில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போராட்டமானது கேலிக்கூத்தாக முடிவடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.
பல்வேறு ஊடகங்களிலும் குளிர்பான உற்பத்தியில் 2500 பேர் வரை ஈடுபடுவதாகச் செய்திகள் வெளியான போதிலும், இப்போராட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் உட்பட 22 பேர் வரையே கலந்து கொண்டார்கள் என்பது நகைப்பிற்கிடமான விடயமாகும்.
யாழ் மாவட்டத்தில் நீரினால் பரவும் நோய்களான வயிற்றோட்டம் மற்றும் நெருப்புக் காய்ச்சலினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிப்பதை அடுத்து, பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட ஐஸ் கிறீம் மாதிரிகளில் மலக்கழிவுகள் கலந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் விசேடமாக அமைக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் குழுவினரால் ஐஸ் கிறீம் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவற்றில் சிலவற்றின் உற்பத்திகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பரிந்துரைக்கப்பட்டு, திருத்த வேலைகள் முடிவடைந்த நிலையில் படிப்படியாக தற்போது 33 ஐஸ் கிறீம் உற்பத்தி நிலையங்கள் மீள இயங்கி வருகின்றன.
இந்நிலையில் இப்பிரச்சினையை அரசியலாக்க நினைத்த சிலர் குளிர்பான உற்பத்தியாளர் சங்கம் எனத் தம்மைத் தானே அறிவித்து, பதிவு செய்யப்பட்டாத சங்கம் ஒன்றை உருவாக்கியிருந்தார்கள்.
இச்சங்கத்தின் தலைவராக உதயசிறி என்பவர் இருப்பதாகவும் இவரது அம்மா ஜுஸ் எனப்படும் உற்பத்தி நிலையமானது மிகவும் சுகாதாரக் கேடான நிலையில் இயங்கிய நிலையில் நீதிமன்றினால் சீல் வைக்கப்பட்டது.
இன்றைய போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததுடன், அரசுக்குச் சார்பான கோஷங்களும் எழுப்பப்பட்டதாக அறிய முடிகின்றது.
இந்நிலையில் யாழ் மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரம் அவர்கள் இப்போராட்டத்தை வன்மையாகக் கண்டித்திருப்பதுடன் அனைத்து வர்த்தகர்களுக்கும் இவ்வகையான போராட்டங்களை அவமானமாகக் கருதுவதாகவும் தெரிவித்திருக்கின்றார்.
திருத்தம் செய்யப்பட்டு மீள் இயங்க ஆரம்பிக்கப்பட்ட ஐஸ் கிறீம் உற்பத்தி நிலையங்களை நேற்றைய தினம் பார்வையிட்ட ஜெயசேகரம் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
போலியான சிறு சிறு போராட்டங்களையும் பொய்யான பிரச்சாரங்களையும் கண்டு சுகாதார முன்னேற்றத்திற்கான சிறந்த முயற்சிகளைக் கைவிட வேண்டாம் எனவும் ஆகக் குறைந்த அடிப்படையான சுகாதார வசதிகள் அற்ற உற்பத்தி நிலையங்களைத் திருத்தம் செய்யப்படாமல் திறக்க வேண்டாம் எனவும் கல்விமான்களும் பொதுமக்களும் சுகாதாரத் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
http://www.tamilwin.com/show-RUmszBSUKXex6.html

Geen opmerkingen:

Een reactie posten