தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 12 november 2014

ஆஸி, புகலிடக் கோரிக்கையாளர் பிரச்சினைக்குத் தீர்வாக தாஸ்மானியா திட்டம்!- மொரிசன்


இலங்கையில் தற்போதைய முன்னெடுப்புக்கள், ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானவை!- கருத்து
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 11:23.24 PM GMT ]
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாதவகையில் ஜனநாயகத்துக்கான போராட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. இது மிகவும் ஆரோக்கியமான விடயம் என்று ஆங்கில இணையம் ஒன்று கட்டுரை தீட்டியுள்ளது.
இதுவரைகாலமும் அமைதியாக இருந்த மக்கள் தற்போது விழித்துக் கொண்டிருப்பதை ஊவா தேர்தல் உணர்த்தியது.
அங்கு அரசாங்கத்தினால் நிவாரணங்கள் வழங்கப்பட்ட போதும் மக்கள் அவற்றை புறந்தள்ளிவிட்டு அரசாங்கத்துக்கு எதிராக வாக்குகளை பயன்படுத்தினர்.
அதேபோன்றே 2015 வரவுசெலவுத் திட்டத்திலும் அரசாங்கம் அரச பணியாளர்களை கவரும் வண்ணம் பல வெகுமதிகளை கொடுத்துள்ளது.
எனினும் தற்போது நாட்டில் ஜனநாயகத்துக்கான தேவை ஒன்று இருப்பதையே மக்கள் முன்னிலைப்படுத்துகின்றனர்.
இதனைக் கருத்திற்கொண்டே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட தலைப்பட்டுள்ளன.
அதிலும் சிவில் குழுக்கள், தனியார் போக்குவரத்துத்துறையினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இதில் இணைந்துள்ளமை ஆரோக்கியமான விடயமாக கருதப்படுகிறது.
1978ம் ஆண்டு இயற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு 18வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் அபரிதமித அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக இன்று நாட்டில் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் முன்கொண்டு வந்துள்ள கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
எனவே இந்த முன்னெடுப்பு சிறப்பாக கொண்டு செல்லப்படுமானால் நாட்டில் உண்மை ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்று இணையத்தளம் கருத்துரைத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnt5.html


ஆஸி, புகலிடக் கோரிக்கையாளர் பிரச்சினைக்குத் தீர்வாக தாஸ்மானியா திட்டம்!- மொரிசன்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 11:33.02 PM GMT ]
அவுஸ்திரேலியா புதிதாக தற்போது புகலிடம் கோருவோரின் விண்ணப்பம் மற்றும் அவர்களை தாஸ்மானியாவுக்கு அனுப்பும் திட்டம் ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்த உள்ளது.
இதன் காரணமாக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தொழில் செய்வதற்கும் படிப்பதற்கும் அனுமதி அளிக்கப்படும் என தெரியவருகின்றது. 
இந்த நடவடிக்கையானது, தற்போது கடைப்பிடிக்கும் கொள்கைகளுக்கும் பார்க்க புகலிடக் கோரிக்கையளர்கள் மத்தியில் சிறிய மாற்றத்தை ஏற்ப்படுத்தலாம்.
காரணம் இந்த மாற்றம் ஏற்படுமானால் புகலிடக் கோரிக்கையாளர்கள் நேர்மையான முறையில் தொழில் செய்யவும் முடியும்.
குறைந்த பணம் கொடுத்து அடிமாடு போல் வேலை வாங்கும் சிலரது முகத்திரையையும் கிழிக்க முடியும்.
எது எவ்வாறாயினும் இனியொரு புதிய கொள்கைகளை காட்டி நேரம் தாழ்த்தாமல் புகலிடம் கோருவோர்களுக்கு ஒரு முடிவு வந்தால் சிறந்தது.
தாஸ்மானியாவிற்கு வாய்ப்பளிக்கும் தலைவர்களது மாநாட்டில், மாநிலத் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் திட்டத்தை முன்மொழிந்ததாக அவுஸ்திரேலியா செய்திகள் கூறுகினறன.
இந்த மாநாட்டில் பிரபல சட்டத்தரணி ஜூலியன் பேர்ண்சைட் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள்  உரையாற்றினார்கள்.
மத்திய அரசாங்கத்தின் ‘இறையாண்மை எல்லைகள்’ என்பதற்கு மாற்றாக அமையக் கூடிய கொள்கையை தாஸ்மானியா முன்வைத்துள்ளதென திரு.பேர்ண்சைட் தெரிவித்தார்.
மாற்றுக் கொள்கை மனிதநேயம் மிக்கதாகவும், அவுஸ்திரேலிய மக்கள் செலுத்தும் வரிக்கு பெறுமதி வழங்கக்கூடியதாகவும், உள்ளுர் பொருளாதாரத்திற்கு அனுகூலம் பயப்பதாகவும் அமையுமென அவர் கூறினர்.
இந்தத் திட்டத்தில், புகலிடக் கோரிக்கையாளர்களை தாஸ்மானிய சமூகத்தில் வாழவும் வேலை செய்யவும், இடமளித்தல், சென்டர்லிங் அனுகூலங்களைப் பெறுதல், அவர்களது பணம் உள்ளுர் பொருளாதாரத்திற்கு அதிகூடுதலான அனுகூலங்களைப் பெற்றுத் தரக்கூடுமென அரசாங்கம் கருதும் இடத்தில் வாழ வைத்தல் போன்ற யோசனைகளும் உள்ளடங்கியிருக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnt6.html

Geen opmerkingen:

Een reactie posten