woensdag 12 november 2014

சீனாவில் சட்டமே உயர்ந்தது! ஆட்சியாளர் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்! ஆனால் நட்பு நாடான இலங்கையில்?


வெற்றிபெற முடியாத காரணத்தினாலேயே நிறைவேற்றதிகார முறைமையை நீக்குமாறு ரணில் கோருகின்றார்!– டிலான்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 11:39.47 PM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாத காரணத்தினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரி நிற்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார முறைமையை ரத்து செய்ய வேண்டும். எனினும் அதனை அரசியலமைப்பு திருத்தங்களின் ஊடாக செய்ய முடியாது.
புதிதாக அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கியே நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
நாடாளுமன்றில் அரசியலமைப்பு குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
2010ம் ஆண்டிலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியிடம் பொருத்தமான வேட்பாளர் இருக்கவில்லை.
இரண்டாம் தடவையாக மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரினால் போட்டியிட முடியாத காரணத்தினால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு கோருகின்றனர்.
ஏற்கனவே 18 தடவைகள் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அதனை அமுல்படுத்தும் ஆற்றல் ஆளும் கட்சிக்கே காணப்படுகின்றது என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnt7.html


சீனாவில் சட்டமே உயர்ந்தது! ஆட்சியாளர் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்! ஆனால் நட்பு நாடான இலங்கையில்?
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 11:47.37 PM GMT ]
சட்டம் உயர்ந்தது அத்துடன் ஆட்சியாளர் சட்டத்துக்கு உட்பட்டவரா? அல்லது ஆட்சியாளரே உயர்ந்தவரா? இந்தக் கேள்வி இலங்கையின் இன்றைய நிலைக்கு பொருத்தம் என்ற அடிப்படையில் கேட்கப்பட்டுள்ளது.
இதற்காக இலங்கையின் நட்பு நாடான சீனாவின் ஜனநாயகம் மற்றும் சட்டம் ஒழுங்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இலங்கையின் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சீனாவில் முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியே சட்டங்களை கட்டுப்படுத்தி வந்த காலம் இருந்தது. எனினும் தற்போது அங்கு சட்டத்துக்கு உட்பட்ட வகையிலேயே அரசாங்கம் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கடப்பாடு தோன்றியுள்ளது.
இதன் அடிப்படையிலேயே அண்மைக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் நிலை தலைவர் ஒருவரின் பாரிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது.
அத்துடன் பிராந்திய நீதிமன்றம் ஒன்றின் தீர்ப்புப்படி,  சட்ட திட்டங்களை அரசியல்வாதிகள் தீர்மானிப்பதை விடுத்து அவர்கள் சட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சீனாவில் அவ்வாறான நிலை ஒன்று இருக்கும் போது நட்பு நாடான இலங்கையில் 18வது அரசியல் அமைப்பு விளக்கம் விடயத்தில் சட்டம், அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்ட நிகழ்வே நேற்று இடம்பெற்றதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnuy.html

Geen opmerkingen:

Een reactie posten