தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 13 november 2014

மீனவப் படகுகளுக்கு செய்மதிக் கண்காணிப்பு கட்டமைப்பு

நீர்கொழும்பில் ஜனாதிபதி தேர்தல் அலுவலகம்! அமைச்சர் லான்சா புறக்கணிப்பு
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 03:24.16 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கம்பஹா மாவட்டத்தின் பிரதான தேர்தல் அலுவலகம் நீர்கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நேற்று இந்த அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.
இந்நிகழ்வில் மீன்வளத்துறை பிரதியமைச்சர் சரத்குமார குணரத்தின, திருமதி சுஜாதா குணரத்தின மற்றும் தொகுதியின் முக்கிய அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் நீர்கொழும்பின் இன்னொரு முக்கிய அரசியல்வாதியான மேல்மாகாண அமைச்சர் நிமல் லான்சா இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
அவருக்கு ஆதரவாக இருக்கும் நீர்கொழும்பு நகர சபையின் முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாத விடயம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதியமைச்சர் சரத் குமார குணரத்தினவுடனான அரசியல் முறுகல் நிலை காரணமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நீர்கொழும்பு தொகுதியில் சுதந்திரக் கட்சியை தோற்கடிக்கப் போவதாக மாகாண அமைச்சர் லான்சா சூளுரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmr3.html
எதிர்க்கட்சி சிதறுண்டு போயுள்ளது! ஜனாதிபதிக்கே வெற்றி: அமைச்சர் டளஸ் அழகப்பெரும
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 05:07.10 AM GMT ]
எதிர்க்கட்சிகள் சிதறுண்டு காணப்படுவதால் எதிர்வரும் தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான ஆளுங்கட்சியே வெற்றிபெறும் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நேற்று மாத்தறையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டளஸ் அழகப்பெரும, அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் செல்வாக்கு சரிந்து செல்வது தான் வழக்கம். ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. எதிர்க்கட்சிகள் தான் நாளுக்கு நாள் செல்வாக்கை இழந்து வருகின்றன.
எதிர்க்கட்சிகள் இன்று சிதறுண்டு போயுள்ளன. ஆளுங்கட்சிக்கு எதிராக தகுதியான வேட்பாளர் ஒருவரை நிறுத்தக் கூட வழியற்று எதிர்க்கட்சிகள் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன.
எனவே எதிர்வரும் தேர்தல்களிலும் ஆளுங்கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmr4.html
மீனவப் படகுகளுக்கு செய்மதிக் கண்காணிப்பு கட்டமைப்பு
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 05:13.30 AM GMT ]
நாட்டிலுள்ள மீனவ படகுகளுக்கு செய்மதி கண்காணிப்பு கட்டமைப்பை பொருத்துவதற்காக டென்மார்க் நிறுவனம் ஒன்றுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது.
ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் 3 ஆயிரம் படகுகளுக்கு அடுத்த வருடம் இந்த தொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தின் டுனா ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு ஆகியவற்றின் பரிந்துரைக்கு அமைய பொருத்தப்படவுள்ள இந்த கட்டமைப்பு தொடர்பான உடன்படிக்கை கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நேற்று கைச்சாத்திடப்பட்டது.
மீனவ படகுகளுக்கு இந்த கண்காணிப்பு கட்டமைப்பை பொருத்துவதன் மூலம் அவற்றின் நகர்வினை கண்காணிக்க முடியும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmr5.html

Geen opmerkingen:

Een reactie posten