[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 07:19.40 AM GMT ]
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த மங்கள சமரவீர இன்று காலை நாடு திரும்பியுள்ளதுடன் நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
சிங்கப்பூரில் நேற்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவை சந்தித்துள்ள மங்கள் பொது வேட்பாளரை நிறுத்துவது சம்பந்தமான பொது வேலைத்திடம் பற்றிய உடன்படிக்கையில் கையெழுத்திட எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் இலங்கை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், சரத் பொன்சேகா நாளைய தினம் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnw0.html
சர்வதேச நாடுகளினால் கொண்டு வரப்படும் போர் குற்றத்திற்கு பதிலளிப்பதற்காகவே அவசரமான ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதாக சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நேற்று ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவை சந்தித்துள்ள மங்கள் பொது வேட்பாளரை நிறுத்துவது சம்பந்தமான பொது வேலைத்திடம் பற்றிய உடன்படிக்கையில் கையெழுத்திட எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் இலங்கை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், சரத் பொன்சேகா நாளைய தினம் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnw0.html
போர்க்குற்றத்திற்கு பதிலளிக்க ஜனாதிபதித் தேர்தலாம்: அதாவுத செனவிரட்ன கூறும் கதை
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 07:46.23 AM GMT ]
சிரேஷ்ட அமைச்சர்களின் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
போர் குற்றத்திற்காக பதிலளிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த தேர்தலின் போது மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இருக்கின்றனர் என்பதை போர் குற்றம் சுமத்தும் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.
போர் நடைபெற்ற காலத்தில் போரை நிறுத்துமாறு சில வெளிநாடுகள் அழுத்தங்களை கொடுத்தன. சில நாடுகள் பயங்கரவாதிகளை மீட்க கப்பல்களை அனுப்பியிருந்தன.
எனினும் இந்த வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதன் காரணமாக வெளிநாடுகள் போர் குற்றங்களை சுமத்தி விசாரணைகளை நடத்தி வருகின்றன. இதற்கு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் சிறந்த பதிலை வழங்க வேண்டும் எனவும் அதாவுத செனவிரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnw1.html
வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான நிர்மாணப் பணிகள் நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படுமென நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
போர் குற்றத்திற்காக பதிலளிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த தேர்தலின் போது மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இருக்கின்றனர் என்பதை போர் குற்றம் சுமத்தும் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.
போர் நடைபெற்ற காலத்தில் போரை நிறுத்துமாறு சில வெளிநாடுகள் அழுத்தங்களை கொடுத்தன. சில நாடுகள் பயங்கரவாதிகளை மீட்க கப்பல்களை அனுப்பியிருந்தன.
எனினும் இந்த வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதன் காரணமாக வெளிநாடுகள் போர் குற்றங்களை சுமத்தி விசாரணைகளை நடத்தி வருகின்றன. இதற்கு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் சிறந்த பதிலை வழங்க வேண்டும் எனவும் அதாவுத செனவிரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnw1.html
வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 07:47.54 AM GMT ]
வரலாற்றில் அதிகூடிய முதலீடான 300 முதல் 350 பில்லியன் ரூபா செலவில் இந்த அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கடந்த மாதம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்டம் 4 வருடங்களில் நிறைவு செய்யப்பட இருப்பதாகவும்,இதனூடாக கண்டிக்கும், தம்புள்ளைக்கும் 1 1/4 மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்றும் அமைச்சர் கொத்தலாவல குறிப்பிட்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnw2.html
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினரான நடிகை உபேக்ஷா ஸ்வர்ணமாலியிடம் நாட்டு வீரர்கள் அமைப்பை ஒப்படைத்துள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்டம் 4 வருடங்களில் நிறைவு செய்யப்பட இருப்பதாகவும்,இதனூடாக கண்டிக்கும், தம்புள்ளைக்கும் 1 1/4 மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்றும் அமைச்சர் கொத்தலாவல குறிப்பிட்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnw2.html
மகிந்தவின் கரங்களை பலப்படுத்திய உபேக்ஷா ஸ்வர்ணமாலிக்கு புதிய பொறுப்பு
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 07:57.35 AM GMT ]
அவரும் இந்த அமைப்பின் குடும்பத்தின் சேர்ந்தவர் என்பதால் அதற்குரிய பணியை சிறந்த முறையில் செய்வார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மாலனி பொன்சேகாவும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மாலனி பொன்சேகா மீது செலுத்தும் அன்பை, மக்கள் உபேக்ஷா ஸ்வர்ணமாலி மீதும் செலுத்துவார்கள் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் டிலான் பெரேரா, உபேக்ஷா ஸ்வர்ணாமாலியிடம் கையளித்துள்ளார்.
அவரது புதிய பொறுப்பை கையேற்கும் நிகழ்வு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சில் நடைபெற்றது.
உபேக்ஷா ஸ்வர்ணமாலி ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த போவதாக கூறி, பின்னர் அரசாங்கத்தில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnw3.html
பொன் அணிகளின் போர் துடுப்பாட்ட போட்டியின்போது, அமலன் என்ற மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 10ஆவது சந்தேகநபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நிதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாலனி பொன்சேகா மீது செலுத்தும் அன்பை, மக்கள் உபேக்ஷா ஸ்வர்ணமாலி மீதும் செலுத்துவார்கள் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கான நியமனக் கடிதத்தை அமைச்சர் டிலான் பெரேரா, உபேக்ஷா ஸ்வர்ணாமாலியிடம் கையளித்துள்ளார்.
அவரது புதிய பொறுப்பை கையேற்கும் நிகழ்வு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சில் நடைபெற்றது.
உபேக்ஷா ஸ்வர்ணமாலி ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த போவதாக கூறி, பின்னர் அரசாங்கத்தில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnw3.html
கிரிக்கெட்டின் போது கொல்லப்பட்ட மாணவன்: 10 ஆவது சந்தேக நபருக்கு விளக்கமறியல்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 08:05.42 AM GMT ]
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 9 சந்தேகநபர்கள், ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே 10ஆவது சந்தேகநபரான சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன், இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி இடம்பெற்ற பொன் அணிகள் போரின் போது, பழைய மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில், சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான ஜெயரட்ணம் தர்ஷன் அமலன் (வயது 23) என்ற இளைஞன் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில், ஏற்கனவே 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 10ஆவது சந்தேகநபர், தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த வழக்கு நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதல் 9 சந்தேகநபர்கள் மற்றும் சரணடைந்தவர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnw4.html
இலங்கையில் தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கி ரத்து செய்வார் என்று கூறியிருப்பது ராஜபக்சவின் அரசியல் சூழ்ச்சியே என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி மைதானத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி இடம்பெற்ற பொன் அணிகள் போரின் போது, பழைய மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில், சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான ஜெயரட்ணம் தர்ஷன் அமலன் (வயது 23) என்ற இளைஞன் அடித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையுடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில், ஏற்கனவே 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 10ஆவது சந்தேகநபர், தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்த வழக்கு நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதல் 9 சந்தேகநபர்கள் மற்றும் சரணடைந்தவர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி விளக்கமறியலில் வைத்து நீதவான் உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnw4.html
மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு! ராஜபக்சவின் அரசியல் சூழ்ச்சி!- வைகோ
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 08:54.10 AM GMT ]
மலேசியாவில் நடைபெற்ற பினாங்கு உலகத் தமிழ் மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து விட்டு இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
இலங்கை தமிழர்களுக்காக நான் பல்வேறு நாடுகளில் நடந்த மாநாடுகளில் பேசி இருக்கிறேன். மலேசியா மாநாடுதான் எனது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
ஏனெனில் இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் தமிழ் மொழியை பற்றி மிகவும் சிறப்பாக பேசினார்கள். மேலும் ஈழத் தமிழர்களுக்கும் பலத்த ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது, இலங்கையில் தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை ராஜபக்ச ரத்து செய்வார் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளாரே என்று நிருபர்கள் வைகோவிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு வைகோ பதிலளிக்கையில்,
இது ராஜபக்சவின் அரசியல் சூழ்ச்சி. இதற்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து போதை பொருள் கடத்தி வந்தவர்களுக்கு கூட தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை.
அப்பாவியான 5 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசை ராஜபக்ச தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சி செய்கிறார்.
இது தமிழர்களிடையே தன்னை நல்லவராக காட்டிக் கொள்ளும் நாடகம் ஆகும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnw5.html

Geen opmerkingen:
Een reactie posten