dinsdag 18 november 2014

ராஜபக்ஸ குடும்பத்திற்கு "இளனி வெட்டி" கொடுத்த மேர்வினுடன் "டீல்" தற்போது முடிந்தது !

அமைச்சர் மேர்வின் சில்வாவும் மகிந்த ராஜபக்ஷவும் எவ்வளவு பாலியல்.... சீ சீ -இல்லை இல்லை பாலிய நண்பர்கள் என்பது யாவரும் அறிந்த விடையம். அவர் அந்த காலத்திலேயே மகிந்த குடும்பத்துக்கு இளனி வெட்டிக்கொடுத்தாராம் என்று பலருக்கு சொல்லி பெருமைப்படுவார். இது இவ்வாறு இருக்க, மேர்வின் சில்வாவின் வெறிக்குட்டி மகனான மாலக சில்வா சமீபத்தில் கழியாட்ட விடுதி ஒன்றில் வைத்து, பிரித்தானிய தம்பதிகளை தாக்கியுள்ளார். பிரித்தானிய தம்பதிகள் மாலக சில்வாவை அடையாளம் காட்டியதை அடுத்து அவரை கைதுசெய்து பொலிசார் சிறையில் அடைத்தார்கள். பின்னர் 2 முறை பிணையும் நிராகரிக்கப்பட்டது. அது எல்லாம் பழைய கதை.
புது கதை என்னவென்றால், மாலக சில்வாவின் மெய்பாதுகாப்பாளர் மற்றும் மேலும் ஒரு நண்பரையும் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். அவர்களே பிரித்தானிய ஜோடியை தாக்கினார்கள் என்று வழக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளதாக அதிர்வு இணையத்தின் கொழும்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் மாலக சில்வாவுக்கு பிணை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரித்தானிய ஜோடி கொடுத்த முறைப்பாட்டை அடுத்து மாலகவை கைதுசெய்வது போல பொலிசார் நாடகமாடி, பின்னர் தற்போது விடுவிக்க உள்ளார்கள்.
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இந்த தாக்குதல் தொடர்பாக தாம் உண்ணிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார். பிரித்தானிய தூதரகம் இந்தப் பிரச்சனையில் தலையிட்டதனாலேயே மாலக கைதானார். இல்லையென்றால் முன்னரே அவர் விடுதலையாகி இருப்பார். தற்போது பிரித்தானிய தூதுவருக்கும் காதில் பெரிய பூ ஒன்றை சுற்றியுள்ளது இலங்கை அரசு. மேர்வின் சில்வா ஆண்டாண்டாக இளனி வெட்டிக்கொடுத்த பலனை அனுபவிக்கிறார் போல...
http://www.athirvu.com/newsdetail/1462.html

Geen opmerkingen:

Een reactie posten