vrijdag 14 november 2014

கடனுக்கு "கள்" கொடுக்காததால் கை முறிக்கப்பட்டது - ஆவரங்காலில் சம்பவம் : பதறும் யாழ் !

யாழ்ப்பாணத்தில் பிரிட்டன் அணுவிஞ்ஞானி! – மாணவர்களுடன் கலந்துரையாடல்

[ Nov 14, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 2815 ]
பிரிட்டனின் அணு விஞ்ஞானியும் பௌதீகவியல் பேராசிரியருமான வின்சன்ற் ஸ்மித் இன்று யாழ்ப்பாணத்துக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டார். இவர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலைகளுக்கு சென்றதோடு பி.ப 12.30 மணியளவில் பரியோவான் கல்லூரியில் க.பொ.த உயர்தர மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின் ஐன்ஸ்டீன் வாழ்க்கை மற்றும் பௌதீகவியலில் அவருடைய புரட்சிகள் தொடர்பான விரிவுரை ஒன்றையும் நிகழ்த்தினார். இந்த கருத்தரங்கில் யாழ்.மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.




கடனுக்கு "கள்" கொடுக்காததால் கை முறிக்கப்பட்டது - ஆவரங்காலில் சம்பவம் : பதறும் யாழ் !

[ Nov 14, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 3615 ]
யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியிலுள்ள கள்ளுத் தவறணையில் கடனுக்கு கள் கொடுக்க மறுத்த பணியாளரின் கையை அடித்து முறித்தவரை புதன்கிழமை (12) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் வியாழக்கிழமை (13) தெரிவித்தனர்.
ஆவரங்கால் பகுதியிலுள்ள தவறணை ஒன்றில் கள் அருந்துவதற்காக நபர் ஒருவர் கடந்த 9ஆம் திகதி சென்றுள்ளார். முதல் இரண்டு குவளை கள்ளை பணம் கொடுத்து அருந்திய நபர், மூன்றாவது குவளை கள்ளை கடனுக்கு தரும்படி தவறணை பணியாளரை கேட்டுள்ளார். அதற்கு பணியாளர் மறுக்கவே, மேற்படி நபர் அருகிலிருந்த கட்டையை எடுத்து பணியாளரின் கையில் பலமாக அடித்துள்ளார்.
பணியாளரர், கை முறிந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து, ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய சந்தேநகநபரை கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
http://www.athirvu.com/newsdetail/1439.html

Geen opmerkingen:

Een reactie posten