[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 02:49.54 AM GMT ]
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று மூன்று பிள்ளைகளில் ஒருவருக்கு மந்த போசனை நிலவுகின்றது. கம்பஹா மாவட்டத்தில் அதிகளவானவர்கள் மந்த போசாக்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை முழுவதிலும் மூன்றில் ஒரு குழந்தை மந்த போசாக்கு காணப்படுகின்றது.
இவ்வாறான ஓர் நிலைமையில் நாட்டில் மந்த போசனை குறைந்துள்ளதாகத் தெரிவித்து ஆளும் கட்சி மக்களை பிழையாக வழிநடத்தக் கூடாது.
கடந்த நான்கு ஆண்டுகளில் சிறுவர்கள் மீது 32000 குற்றச் செயல்களும், பெண்கள் மீது 36000 குற்றச் செயல்களும் இடம்பெற்றுள்ளன.
மாகாண சபைகளில் ஐந்து வீதமான பெண்களே அங்கம் வகிக்கின்றனர். நாடாளுமன்றில் 11 பெண்களே அங்கம் வகிக்கின்றனர் என ரோசி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnpy.html
மகிந்தவிற்கு ஆதரவு! கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவு
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 03:28.55 AM GMT ]
கட்சியின் பொதுச் செயலாளர் டியூ.குணசேக்கர, நேற்றைய மத்திய குழுக் கூட்டத்தில் முன்வைத்த ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் யோசனைக்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
ஒருவர் மாத்திரம் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்காத நிலையிலும், அதற்கு ஜனாதிபதி பொறுப்புக் கூறாத நிலையிலும் ஜனாதிபதியை ஆதரிப்பது நியாயமல்ல என எதிரணியினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
கட்சிக்குள் முரண்பட்டிருக்கும் இவர்கள் மாதுளுவாவ சோபித தேரரின் நிலைப்பாட்டில் நின்று அவரை ஆதரிக்கப் போவதாகவும் தெரிய வருகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnpz.html
ஐந்து மீனவர்களின் தூக்கு! உயர்மட்ட விடயமாகியுள்ளது: வெளியுறவு பேச்சாளர்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 03:30.04 AM GMT ]
இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் சைய்ட் அக்பருதீன் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த விடயம் அர்ப்பணிப்பு சிந்தனையுடன் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த விடயத்தில் மகிழ்ச்சியான முடிவு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசியபோது மீனவர் மரண தண்டனை விடயமும் பேசப்பட்டதா?என்ற செய்தியாளர்களின் கேள்வியை அக்பருதீன் தவிர்த்துக்கொண்டார்.
இது மிகவும் உணர்வுப்பூர்வமான விடயம் என்பதை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மீனவர்கள் 77 ஏனைய நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்: மீன்பிடி திணைக்களம்
இலங்கையின் 77 மீனவர்களும் 29 படகுகளும் இந்தியா, பங்களாதேஸ் மற்றும் மியன்மார் போன்ற நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மீன்பிடித் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 40 மீனவர்களும் 22 படகுகளும், பங்களாதேஸில் 20 மீனவர்களும் 4 படகுகளும், மியன்மாரில் 17 மீனவர்களும் 3 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் லால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnp0.html
Geen opmerkingen:
Een reactie posten