லண்டனில் நடைபெற்று வரும் வினோதத் திருட்டால், ஒருவகைப் பீதி ஏற்பட்டுள்ளது. கார் மற்றும் எனைய விலை கூடிய வாகனங்களில் இருந்து எக்ஸ்-ஸோஸ்(சைலன்சர்) திருடுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. வாகனத்தின் கீழ் புறமாக 3 பகுதியாக இந்த சைலன்சர் பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சினில் இருந்து வரும் கழிவுப் புகையை வடிகட்டி வெளியேவிட உதவும், எக்ஸ்ஸோசில் கடைசிப் பாகம் மிகவும் விலை கூடியது ஒன்றாகும். மேலும் இதனை இலகுவாக களற்றவும் முடியும். திருடர்கள் இதனையே தற்போது குறிவைத்துள்ளார்கள். அதுவும் BMW, மேர்சடிஸ் பென்ஸ் போன்ற கார்களின் சைலன்சர் சுமார் 300 தொடக்கம் 400 பவுன்சுகள் விற்கப்படுகிறது.
இதுபோல பெறுமதி மிக்க வாகனங்களில் உள்ள சைலன்சர்களைகளற்றி, ஒரு பெரும் கும்பல் விற்றுவருகிறது. தமிழர்களால் நடாத்தப்படும் வாகன திருத்த நிலையங்களில் , கடந்த சில தினங்களாக இதுபோன்ற சைலன்சர் களவாடப்பட்ட பல வாகனங்கள் வருவதாக அதிர்வு இணையம் அறிகிறது. இது பரந்துபட்ட அளவில் நடைபெற ஆரம்பித்துள்ளது. எனவே உங்கள் பெறுமதிமிக்க கார்களை பாதுகாத்துக் கொள்வது நல்லது தமிழ் மக்களே.
Geen opmerkingen:
Een reactie posten