தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 11 november 2014

மட்டக்களப்பை அதிர வைத்த பாடசாலை மாணவனின் விபத்து! (இளகிய மனம் படைத்தவர்கள் தவிர்க்கவும்) (படங்கள், வீடியோ இணைப்பு)


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டவன்வெளி திருமலை வீதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தொன்றில் பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளான். இன்றைய தினம் பிற்பகல் 3.45 மணியளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் பகல் நேர வகுப்புக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை வேகமாக வந்த பஸ் வண்டி அவர் மீது மோதியதிலேயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.

கூழாவடியைச் சேர்ந்த அ.கேசாந் (13) என்பவரே பலியானவராவார். விபத்தில் கால் வேறு உடல் வேறான நிலையில் சடலம் வீதியில் வீசப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு நீதவான் நீதி மன்ற நீதிபதி அப்துல்லா சடலத்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மட்டக்களப்பு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
11 Nov 2014

http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1415692819&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten