[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 08:24.23 AM GMT ]
அத்துடன் மிரட்டல்களுக்கு அச்சுறுத்தல்களுக்கும் தான் அஞ்சப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திடீர் சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் சோபித தேரரின் நலமறிய சென்றிருந்த தினியாவல பாலித தேரரிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை திட்டமிட்டப்படி திங்கட்கிழமை மதியம் பொது வேட்பாளர் தொடர்பான பொது வேலைத்திட்டம் குறித்த உடன்படிக்கை கையெழுத்திடப்படும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் முக்கியஸ்தரான சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlx2.html
நாட்டில் தகவலறியும் உரிமையை சட்டமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகலா மகேஸ்வரன்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 08:26.57 AM GMT ]
ஊடக சுதந்திரத்தைக் கட்டி எழுப்புவதற்கு தகவல் அறியும் உரிமை அவசியமானதாகும் ஆகவே இதனை சட்டமாக்குவதற்கு அரசாங்கம் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ. தே. கவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இம் முறை வரவு செலவுத் திட்டத்தில் ஊடகத் துறைக்கான ஒதுக்கீடுகள் போதியளவு இல்லை. நாட்டில் ஊடகத் துறையை பாதுகாப்பதற்கும் கட்டி எழுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் செயற்படும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.
ஊடகத்துறை அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYlx3.html
Geen opmerkingen:
Een reactie posten