[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 02:25.00 AM GMT ]
கொழும்பு காலிமுகத்திடலில் ஐரிசி என்ற இந்த ஹோட்டல் மற்றும் குடியிருப்பு தொகுதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதன்போது அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் ஐரிசியின் தலைவர் வை.சி. தேவசேகர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இதுவே குறித்த ஹோட்டல் இந்தியாவுக்கு வெளியில் மேற்கொள்ளும் முதலாவது ஹோட்டல் திட்டமாகவுள்ளது.
ஏற்கனவே ஐரிசிக்கு இந்தியாவின் பல இடங்களிலும் 100 ஹோட்டல்கள் செயற்பட்டு வருகின்றன.
ஐரிசியின் வருடாந்த வருமானம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
http://www.tamilwin.com/show-RUmszBSaKYksy.html
கண்டி சிறைச்சாலை கைதிகளுக்கு நட்சத்திர ஓட்டல் உணவு!
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 02:43.49 AM GMT ]
புனர்வாழ்வு முகாம் ஒன்றுக்குப் பொறுப்பாக இருந்த ஒருவர் அண்மையில் தும்பறை சிறைச்சாலைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரியின் வருகையின் பின்னர் பணக்கார கைதிகளுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
வட் வரி மற்றும் சுங்கத்தீர்வை மோசடிகளில் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவிக்கும் எட்டு குற்றவாளிகளுக்கு நட்சத்திர ஓட்டல்களிலிருந்து உணவுகளை தருவித்துக் கொடுக்கவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
அவர்களில் சிலர் 20 முதல் 60 வரையான வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.
அவர்களுடன் கடுமையான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ள மேலும் சில கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிய பொறுப்பதிகாரி இவ்வாறான கைதிகளிடமிருந்து கிடைக்கும் நிதி அன்பளிப்புகளுக்காக அவர்களுக்கு விசேட வரப்பிரசாதங்களை செய்து கொடுத்திருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYksz.html
Geen opmerkingen:
Een reactie posten