[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 06:22.51 AM GMT ]
75 லட்சம் ரூபா பெறுமதியான 15 தங்க பிஸ்கட்களை கடத்திய இருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
இன்று அதிகாலை 2.05 அளவில் சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஈ.கே 349 என்ற விமானத்தில் வந்த பயணிகளை சோதனைக்கு உட்படுத்தியபோது இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதன்போது ஒரு சந்தேகநபரின் மலவாயிலில் இருந்து 3 தங்க பிஸ்கட்களும் மற்றைய நபரின் மலவாயியில் இருந்து 12 தங்க பிஸ்கட்களும் மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnqy.html
பொது வேட்பாளர் யானை சின்னத்திலேயே களமிறக்கம்! ஐதேக திட்டவட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 06:28.14 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்திலேயே களமிறங்க வேண்டுமென்பதில் ஐ.தே.க உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மாதுளுவாவே சோபித தேரர், ரணில் விக்ரமசிங்க, கரு ஜெயசூரிய, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆகியோரின் பெயர்கள் பொது வேட்பாளர் தொடர்பில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவின் பெயர்கள் மீளவும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnqz.html
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புங்கள்: இந்தியாவிடம் விக்கி கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 06:35.14 AM GMT ]
தமிழ்நாட்டுக்கு சென்ற முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று சென்னையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கை தமிழர்கள் அகதிகளாக இந்தியாவில் தங்கியுள்ளனர். 115 முகாம்களில் உள்ள ஒரு லட்சம் பேர் வரையிலும் முகாம்களுக்கு வெளியே தங்கி இருப்பவர்களையும் சேர்த்தால் இரண்டு லட்சம் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர்.
பல ஆண்டுகளாக இங்கு இருந்தும் இந்திய குடியுரிமை இதுவரை இவர்களுக்கு கிடைக்கவில்லை. தங்குமிடம், உணவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளை இங்குள்ள அரசுதான் செய்து வருகிறது.
இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறியவர்கள் இனி நாட்டுக்குத் திரும்ப மாட்டார்கள் என அவர்களுக்கு சொந்தமான நிலங்களை இராணுவத்தினர் அபகரித்து வருகின்றனர்.
தாய்நாட்டின் பூர்வீக குடிகளான இரண்டு லட்சம் அகதிகள் இந்தியாவில் இருப்பதால் இலங்கையில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க மக்கள் பிரதிநிதிகளை போதியளவுக்கு எங்களால் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
இதைப் போக்க இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை திரும்பி அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்து, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தேபோது பேச்சு நடத்தினோம்.
இதையடுத்து, அகதிகளைத் திருப்பி அனுப்ப குழு ஒன்றை இந்திய அரசு அமைத்தது. தற்போது மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்று உள்ளது. அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்து, மோடி அரசுடனும் பேச்சு நடத்தி வருகிறோம்.
அகதியாக இந்தியாவுக்கு வந்து பல ஆண்டுகளாகின்றன. திரும்பி தாய் நாட்டுக்குப் போனால் தங்களுடைய நிலங்கள் கிடைக்குமா? போதிய பாதுகாப்பு அளிக்கப்படுமா? என்பதால் இங்குள்ள அகதிகள் நாடு திரும்ப அச்சப்படுகின்றனர்.
இந்த அச்சத்தைப் போக்கி அவர்களது நிலங்களை அவர்களுக்கே அளித்து மீள்குடியமர்வு செய்ய, இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும். இரண்டு லட்சம் அகதிகளை பாதுகாப்பதும் இந்தியாவுக்கு சுமை தான். எனவே தமிழர் நலனுக்காக, அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்புடைய செய்தி:
இந்தியா இன்றி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது: விக்னேஸ்வரன்
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnq0.html
Geen opmerkingen:
Een reactie posten