donderdag 20 november 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அடையாளம் அம்பலம்: திடுக்கிடும் தகவல்கள் (வீடியோ இணைப்பு)!

அமெரிக்க பிணைக்கைதி பீட்டர் காசிக்கின் தலைத் துண்டிப்பு காணொளியில் மேற்கத்திய நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட அமெரிக்க சமூக தொண்டு நிறுவன ஊழியர் பீட்டர் காசிக் (Pater kassig Age-26) சமீபத்தில் தலைத் துண்டித்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
இவருடன் பிணைக்கைதிகளாக பிடிபட்ட 18 சிரியா ராணுவ வீரர்களும் தலைத் துண்டித்து கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலை காணொளியில் பிணைக்கைதிகளின் தலைத் துண்டிக்க, அவர்களின் பின்புறம் கத்தியுடன் நிற்கும் தீவிரவாதிகள் பிரான்ஸ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதில் மேக்ஸிம் ஹவுசார்ட் (Maxime Hauchard Age-22) மற்றும் மைக்கில் டோஸ் சாண்டோஸ் (Michael Dos Santos) என்ற பிரான்சை சேர்ந்த இரு நபர்கள் இருப்பதாக பிரான்ஸ் அதிகாரி பிரான்கோயிஸ் மொலின்ஸ் (Francois Molins) கூறியுள்ளார்.
மேலும் இங்கிலாந்தின் கார்டிப் மருத்துவக்கல்லூரியில் (Cardiff University) பயின்ற நசீர் முத்தன்னா (Nasser Muthana Age-20) என்பவனும் காணொளியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten