தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 12 november 2014

இலங்கை அகதிகளை பலவந்தமாக திருப்பி அழைக்கப் போவதில்லை: விக்னேஸ்வரன்

ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கு 1500 லட்சம்!
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 10:12.20 AM GMT ]
ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட ஜனநாயகக் கட்சியின் மூன்று உறுப்பினர்களுக்கு 1500 லட்ச ரூபா பணம் வழங்கப்பட்டதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் கப்டன் கயான் விதான தெரிவித்துள்ளார்.
அண்மையில் அலரி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் ஜனநாயகக் கட்சியின் மூன்று உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டனர்.
இவர்கள் மூன்று பேரும் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்களாவர்.
குருணாகல் காலி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
வடமத்திய மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி மற்றும் பிரதி அமைச்சர் சரண குணவர்தன ஆகியோரே இவர்களை ஆளும் கட்சியில் இணைத்துக்கொள்ளும் தரகர் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஜனநாயகக் கட்சியின் தென் மாகாணசபை உறுப்பினர் எச்.எல்.பத்மசிறி, வட மத்திய மாகாண சபையின் எம்.எம்.ரட்நாயக்க மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் எச்.கே. அசோக தயாரட்ன ஆகியோர் இவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர்.
500 லட்ச ரூபா பணம் மட்டுமன்றி, வாகன அனுமதிப்பத்திரம் ஒன்றையும் அரசாங்கம் வழங்கியுள்ளது.
கட்சி மீது காணப்படும் அச்சம் காரணமாகவே எமது கட்சி உறுப்பினர்களை ஆளும் கட்சியில் இணைத்துக்கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என கப்டன் கயான் விதான தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனநாயக கட்சியின் உறுப்பினரும் பிரபல நடிகருமான நலின் பிரதீப் உடவெலவை ஆளும் கட்சியில் இணைக்க 500 லட்ச ரூபா பணம் வழங்க எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnx2.html
இலங்கை அகதிகளை பலவந்தமாக திருப்பி அழைக்கப் போவதில்லை: விக்னேஸ்வரன்
[ புதன்கிழமை, 12 நவம்பர் 2014, 10:20.43 AM GMT ]
இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று மாலை நாடு திரும்பியுள்ளார்.
இதனிடையே நாடு திரும்பிய முதலமைச்சர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்ததாவது,
இந்தியாவில் அகதிகளாகத் தங்கியுள்ளவர்கள், தாயகம் திரும்ப வேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுத்துள்ள போதிலும், தாம் பலவந்தமாக அவர்களை திருப்பி அழைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
"போர்ச்சூழல் காரணமாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களின் மீள்குடியேற்றத்திற்காக இந்திய, இலங்கை அரசுகளுடன் வடக்கு மாகாணசபையும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, இந்தியாவுடன் வடக்கு மாகாணசபை ஆலோசனை நடத்தி வருகிறது என்றார்.
தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள மக்களின் நிலங்கள் சிங்களக் குடியேற்றங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அவர்கள் தாயகம் திரும்ப வேண்டியது முக்கியமானது.
இருப்பினும் அவர்கள் சொந்த இடங்களுக்கு, நம்பிக்கையோடு திரும்பி வருவதற்குரிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும் அவர்கள் எவரையும் பலாத்காரமாக நாடு திரும்பச் செய்யப் போவதில்லை. அதேநேரம், வடக்கு மாகாணசபை செயற்படத் தொடங்கியதன் பின்னரே, 13 வது திருத்தச்சட்டத்தில் உள்ள பல குறைபாடுகள் தெரியவந்திருக்கிறது.
தமிழ்மக்களின் சார்பில் இலங்கை - இந்திய உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசு, தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரங்களுடன் வாழத்தக்க வகையில் அந்தத் திருத்தச் சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு மேற்கொண்ட பயணம் அரசியல் சார்ந்ததல்ல. அதனால், அங்குள்ள அரசியல்வாதிகளையோ அரசு சார்ந்த அதிகாரிகளையோ நான் சந்திக்கவில்லை" என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnx3.html

Geen opmerkingen:

Een reactie posten