donderdag 13 november 2014

முரண்பாடுகளை மறந்து மீண்டும் இணைந்த மங்கள மற்றும் திஸ்ஸ!

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக முரண்பாடுகளால் சில வாரங்களாக கோபத்தில் இருந்து வந்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோருக்கு இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. 
இருவரும் கருத்து முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேலைத்திட்டத்திற்கு வலு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த மங்கள சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரின் தூய்மையான நாளை அமைப்பு கொழும்பில் நேற்று நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மங்கள சமரவீரவுக்கு திஸ்ஸ அத்தநாயக்க சிறப்பான வரவேற்பளித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக திஸ்ஸ அத்தநாயக்க முன்னெடுத்து வாக்குச் சாவடி நடவடிக்கை வேலைத்திட்டத்தின் அடுத்த பிரசார நடவடிக்கைகள் குறித்து இருவரும் நேற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmu7.html

Geen opmerkingen:

Een reactie posten