நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யுமாறு அன்று மஹிந்த பாத யாத்திரை மேற்கொண்டார்!– மாதுலுவே சோபித தேரர்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 01:04.13 AM GMT ]
மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது குறித்து வாக்குறுதி அளித்திருந்தார்.
நாட்டின் தற்போதைய தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென சிரேஸ்ட அமைச்சர்களான டியு.குணசேகரää தினேஸ் குணவர்தனää ரெஜினோல்ட் குரே போன்றவர்கள் கோரி வருகின்றனர்.
ஜனாதிபதிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்ய அவகாசம் உண்டு.
இந்த இரண்டு ஆண்டு காலத்தில் நீதிமன்றிற்கும் அரசியலமைப்பிற்கும் பொறுப்பு சொல்லாத ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வோம்.
பொலிஸ் நிலையங்கள் கட்சிக் காரியாலயங்களாக மாற்றமடைந்துள்ளன.
17ம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றின் அனைத்து கட்சிகளும் ஆதரவளித்திருந்தன. அந்த திருத்தச் சட்டத்தை மீளவும் அமுல்படுத்த வேண்டும்.
தற்போது நடைமுறையில் உள்ள விருப்பு வாக்கு முறைமையை அனைவரும் எதிர்க்கின்றனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்த செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என மாதுலுவே சோபித தேரர் கோரியுள்ளார்.
கொழும்பு முத்தையா மைதானத்தில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு போராட்டம் மற்றும் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmq7.html
வடக்கின் புத்தர் சிலைகளை உடைத்து எறிய காத்திருக்கின்றனர்: விமல்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 02:21.50 AM GMT ]
அமெரிக்கத் தூதரகத்திடமிருந்து சம்பளம் பெற்றுக் கொள்வோர் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று நடத்தப்பட்ட கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் புத்தர் சிலைகளை உடைத்து எறிய நேரம் பார்த்து காத்திருக்கின்றனர். நாட்டில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று தேவை கடுமையாக எழுந்துள்ளது.
மக்கள் நலனை உறுதிப்படுத்தக் கூடிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
பௌத்த சங்க நாயக்கர்களின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வெற்றிபெறச் செய்ய அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை இன்னமும் கண்டு பிடிக்கவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சித் தலைவர் பதவி பறிபோய்விடும் என்று ரணில் விக்ரமசிங்கவிற்கு தெரியும்.
வெற்றியீட்ட முடியாத பொது வேட்பாளர் ஒருவரை போட்டியிடச் செய்வதே ரணிலின் நோக்கமாகும்.
தேர்தலில் வெற்றியீட்ட முடியாது எனத் தெரிந்து கொண்ட ஜே.வி.பி. மஹிந்தவிற்கு மூன்று தடவை முடியாது என கோசம் எழுப்புகின்றது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmry.html
Geen opmerkingen:
Een reactie posten