[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 02:31.32 AM GMT ]
மன்னார் மாவட்டம், வெள்ளாங்குளம் சேவலங்கா பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது 34) என்பவரே உயிரிழந்தவராவார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
மேசன் வேலை செய்து முடித்து விட்டு தனது வீட்டிற்குச் சென்று வீட்டு வேலையை செய்து கொண்டிருக்கும் பொழுது திடிரென அவரது காதைத் துளைத்த துப்பாக்கி ரவைகளால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் என்ன காரணத்திற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விபரங்கள் தெரியவரவில்லையெனவும், சடலம் இன்னமும் அப்புறப்படுத்தப் படவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmr1.html
மகளிர் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்த மாணவர்கள்! பல்கலையிலிருந்து இடைநிறுத்தம்!
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 02:44.38 AM GMT ]
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
குறித்த விடுதி பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாக தெரிவித்து நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவுக்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
எனினும் மாணவியர் விடுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும், வெளியார் யாரும் அத்துமீறி பிரவேசிக்க முடியாத வகையில் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகவும் உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக நிர்வாகமும் வலியுறுத்தியிருந்தன.
இந்நிலையில் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் நான்கு மாணவர்கள் பல்கலைக்கழக மாணவியர் விடுதிக்குள் நுழைந்திருந்த நிலையில் நிர்வாகத்திடம் மாட்டிக் கொண்டுள்ளனர்.
தற்போது அவர்கள் கற்றல் நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் மாணவர்களை தனது அறைக்கு வரவழைத்த மாணவிக்கும் விடுதி வசதி ரத்துச் செய்யப்பட்டுள்ளது
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmr2.html
Geen opmerkingen:
Een reactie posten