தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 19 november 2014

மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும்:- சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளிப்பு!


இலங்கையில் ஜனாதிபதியாகின்ற தகுதி இருவருக்கே உள்ளது!– ஞானசார தேரர்
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 03:07.41 PM GMT ]
இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியுள்ளவர்கள் இருவரே உள்ளனர். அந்த இருவரும் எம்முடனே உள்ளனர் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இன்றுள்ள வேட்பாளர்களுக்கு, தலையிருந்தால், முதுகெலும்பில்லை. முதுகெலும்புள்ளவர்களுக்கு தலையில்லை.
எம்மிடமுள்ள இருவருக்கு மட்டுமே இந்த இரண்டும் உள்ளதாகவும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேரர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjw6.html

பொன்சேகாவைப் போன்று ஹெல உறுமயவும் சதி வலையில்: தேசிய சுதந்திர முன்னணி
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 04:27.00 PM GMT ]
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவைப் போன்று ஜாதிக ஹெல உறுமய கட்சியும் சதி வலையில் சிக்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் கீர்த்தி நாமத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். அதன் பின்னர் அவர் தூக்கி எறியப்பட்டார்.
இதேபோன்றதொரு சதி வலையில் ஜாதிக ஹெல உறுமயவும் சிக்கியுள்ளது.
2005, 2010ம் ஆண்டை விடவும் பலமான ஆவேசம் கொண்ட எதிரிகளே இந்த சதி வலைகளை பின்னுகின்றனர்.
தேசிய அமைப்புக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த சதியில் தேசியவாத சக்திகள் சிக்கிவிடக் கூடாது.
ஜாதிக ஹெல உறுமய எடுத்த தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள இன்னமும் காலம் இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjw7.html
ஹெல உறுமய விலகியதனால் தேர்தலுக்குப் பாதிப்பு இல்லை: அமைச்சர் கெஹெலிய
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 04:45.34 PM GMT ]
ஹெல உறுமய கட்சி விலகியதனால் ஜனாதிபதித் தேர்தலுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் கதவு திறந்தேயுள்ளது. யாரும் வரலாம் போகலாம்.
எது எவ்வாறிருந்தாலும், கிராமத்திலுள்ள ஒவ்வொரு குடிமகனும் ஜனாதிபதியுடனேயே உள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் மேல்மாகாண அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தத்தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன், அரசாங்கத்துடன் உள்ள சகல உறவுகளையும் முறித்துக் கொள்வதாக இன்று ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளதமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjxy.html
ஹெலஉறுமய கட்சியின் கம்பஹா முக்கியஸ்தர் ஆளுங்கட்சியில் இணைவு
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 11:30.42 PM GMT ]
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் கம்பஹா மாவட்ட பிரதம அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான மதுமாதவ அரவிந்த ஆளுங்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய கட்சி நேற்று அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்திருந்த நிலையில், நேற்று மாலை விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி இவர் ஆளுங்கட்சியில் இணைந்து கொள்வது குறித்து அறிவித்துள்ளார்.
ஹெல உறுமய கட்சி சார்பில் உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதிகளாக உள்ள 62 பேரில் பெரும்பாலானவர்கள் எதிர்வரும் நாட்களில் தன்னைப் பின்பற்றி ஆளுங்கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் மதுமாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்.
மேலும் அதுரலியே ரத்ன தேரர் கட்சியை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதாகவும் மதுமாதவ அரவிந்த குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் நாட்களில் சம்பிக்க ரணவக மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் மீண்டும் அமைச்சர் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழி பிரபல பாடகரான மதுமாதவ அரவிந்தவுக்கு எதிராக பொரலஸ்கமுவ யுவதி ஒருவரை ஏமாற்றி கற்பழித்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர் சில வருடங்களுக்கு முன்னர் ஜாதிக ஹெல உறுமயவில் இணைந்து ஆளுங்கட்சியின் ஆதரவைப் பெற்றுக் கொண்டார்.
அதன்பின் அவருக்கு எதிரான வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு காரணமாகவே அவர் தனது கட்சியை விட்டு விலகி தற்போது ஆளுங்கட்சியில் இணைந்திருக்கலாம் என்று சிங்கள ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjx0.html

மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும்:- சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளிப்பு
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 01:05.55 AM GMT ]
தமிழக மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று தமிழக பாஜக தலைவர்கள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்தார்.
டில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றைச் சேர்ந்த மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.
இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 24 மீனவர்களை விடுதலை செய்வது, அந்த நாட்டு கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளை மீட்பது, இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களை விடுவிப்பது உள்ளிட்டவை தொடர்பாக மீனவ பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை சுஷ்மா ஸ்வராஜிடம் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கினார்.
இதைத் தொடர்ந்து, மீனவ பிரதிநிதிகளும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுஷ்மா ஸ்வராஜிடம் மனு அளித்தனர்.
 சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது,
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீனவ பிரதிநிதிகளிடம் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்தார்.
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களையும், அந்நாட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் சுஷ்மா ஸ்வராஜை கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களை விடுவிக்கவும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தார்.
மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும். விரைவில் நிரந்தரத் தீர்வு ஏற்படும் என நம்புவதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் நம்பிக்கையுடன் கூறினார்' என்றார் ராதாகிருஷ்ணன்.
இச்சந்திப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறுகையில்,
இந்தக் குழுவில், மீனவர் பிரச்சினைகள் பற்றி நன்கு அறிந்த சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோடி குரூஸும் கலந்து கொண்டார். மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அவரும் சில ஆலோசனைகளை சுஷ்மா ஸ்வராஜிடம் கூறினார்' என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYjx5.html

Geen opmerkingen:

Een reactie posten