தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 19 november 2014

புலம்பெயர் புலிகளுக்கு சவாலான ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ஷ: கெஹெலிய ரம்புக்வெல்ல!

மஹிந்தவை பாதுகாக்கும் தேவை எமக்கில்லை: அத்துரலியே ரத்ன தேரர்
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 09:39.51 AM GMT ]
நாட்டில் சட்டமோ, நீதித்துறை சுதந்திரமோ இல்லை என தூய்மையான நாளை அமைப்பின் ஏற்பாட்டாளரான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற பேரணி ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அந்த பதவிக்கு மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்.
அரசாங்கத்தில் இருக்கும் மிகவும் தேசப்பற்றாளர்கள் எனக் கூறும் நபர்கள். மேற்குலக அழுத்தங்கள் இருக்கின்றது. இதனால் மகிந்தவை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
இந்த விலங்குகளும், புரட்சியாளர்கள் என்று கூறிக்கொள்ளும் துரைமாரும் இதனை எப்படி கூறுகின்றனர் என்பது எனக்கு புரியவில்லை.
மேற்குலக அழுத்தங்கள் என்பதால் மஹிந்தவை பாதுகாக்க வேண்டுமா?. எந்த காரணங்களுக்காகவும் மஹிந்தவை பாதுகாக்கும் தேவை எமக்கில்லை.
பயங்கரவாதத்தை தோற்கடிப்பது என்பதும் நிறைவேற்று அதிகாரத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது என்பது இரு வேறான விடயங்கள் எனவும் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYiq4.html

மட்டு. மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலய புதிய காவலாளியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 09:49.19 AM GMT ]
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலத்திற்கு நியமிக்கப்பட்ட காவலாளியை பாடசாலைக்கு உள்நுழைய விடாது கிராமத்தவர்கள் தடுத்து போராட்டம் நடத்திய சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணசபையினால் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்ட நியமனத்தின் கீழ் ஏறாவூர் பிரதேசத்தினை சேர்ந்த ஒருவருக்கு மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலத்திற்கு நியமனம் வழங்கப்பட்டதை கண்டித்தும் தமது பிரதேசத்தினை சேர்ந்தவர் ஒருவரை நியமிக்குமாறும் வலியுறுத்தியே கடமைக்கு வந்தவர் தடுக்கப்பட்டதாக கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.
மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலத்தின் பழைய மாணவர் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் என்பன இணைந்து இணைந்து இந்த போராட்டத்தினை நடத்தியது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்டோர்,
தமது பாடசாலைக்கு காவலாளி மற்றும் பாடசாலை சிற்றூழியர்களை நியமிக்குமாறும் அதற்காக இருவரின் பெயர்களை அதிபர் ஊடாக பரிந்துரை செய்யப்பட்டு கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபைக்கு அனுப்பி வைத்திருந்தோம்.
அது தொடர்பில் எதுவித பதிலும் இதுவரையில் அனுப்பப்படாத நிலையில் ஏறாவூரை சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரை எமது பாடசாலைக்கு காவலாளியாக நியமித்துள்ளனர்.
எமது பாடசாலைக்கு எமது பகுதியை சேர்ந்த ஒருவரையே காவலாளியாக நியமிக்க வேண்டும்.அதுவரையில் இவ்வாறான நியமனங்கள் பெற்று வருவோரை பாடசாலைக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYiq5.html
புலம்பெயர் புலிகளுக்கு சவாலான ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ஷ: கெஹெலிய ரம்புக்வெல்ல
[ புதன்கிழமை, 19 நவம்பர் 2014, 10:27.56 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எவர் போட்டியிட்டாலும் அவர் புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாகவே இருப்பார் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டி குண்டசாலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வதேசத்தில் உள்ள புலம்பெயர் புலிகளுக்கு சவாலான இலங்கையில் இருக்கும் ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ஷ.
அவரை எதிர்த்து எவர் போட்டியிட்டாலும் அவர் புலம்பெயர் புலிகளின் கைப்பாவையாக இருப்பார்.
இதற்காக புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளும், அவர்களுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களும் மில்லியன் கணக்கில் பணத்தை செலவிட்டு அவர்களின் செயற்பாடுகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர் எனவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த போது வெளிநாட்டில் உள்ள விடுதலைப் புலிகளின் குழுவொன்று பேச்சுவார்த்தை நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், அமைச்சர் கெஹெலிய இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அத்துடன் தான் கூறியது உண்மையாக இருந்தால் ஜனாதிபதி சந்தித்த பிரதிநிதிகளின் யார் என்பதை வெளியிடுமாறும் உண்மையில்லை என்றால் அது பற்றி விளக்குமாறு ரணில், மகிந்தவுக்கு சவால் விடுத்திருந்தார்.
ரணில் விக்ரமசிங்க சுமத்திய இந்த குற்றச்சாட்டு குறித்து அரசாங்கத்தை சேர்ந்த எவரும் இதுவரை மறுக்கவோ நிராகரிக்கவோ இல்லை.
இது தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ வழங்கும் பதிலை அடுத்து ராஜபக்ஷ மற்றும் புலம்பெயர் புலிகளுக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களின் உண்மைகளை வெளியிடுவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு பணத்தை கொடுத்து தனது வெற்றியை உறுதி செய்து கொண்டது போல், இம்முறையும் அப்படியான முனைப்புகளை மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக த இண்டிபெண்டன் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSdKYiq6.html

Geen opmerkingen:

Een reactie posten