[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 09:40.47 AM GMT ]
ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைத்தால் தமக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதியம் கிடைக்காமல் போகும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 5 வருடங்கள் அந்த பதவியை வகித்தால் ஓய்வூதியம் பெற தகுதி பெறுவார்.
5 வருடங்களை பூர்த்தி செய்யாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது.
இதன் காரணமாகவே ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றம் 2010ம் ஆண்டு ஏப்ரல் 22ம் திகதி ஆரம்பமாகியதுடன் அடுத்த வருடம் ஏப்ரல் 22ம் திகதி 5 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYko0.html
ஜனாதிபதி மூன்றாவது தடவையும் தேர்தலில் போட்டி விவகாரம்: பாராளுமன்றில் இன்றும் வாதப்பிரதிவாதங்கள்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 09:50.06 AM GMT ]
உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க சபையில் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ச, உயர்நீதிமன்ற வியாக்கியானம் தம்வசம் கிடைத்தவுடன் சபையில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
வரவு-செலவுத்திட்டத்தின் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.
இன்றைய குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிஹார, மாகாண சபைகள் மீது அரசாஙகம் போதிய கவனம் செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைத்தார்.
மாகாண சபை முதலமைச்சர்கள் மாநாடுகளில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, மாகாண சபை மற்றும் ஆளுநருக்கு இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றிற்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனும் இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
வட மாகாண சபையை செயலிழக்கச் செய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆயினும், இந்த குற்றச்சாட்டை நிராகரித்த குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், உண்மையிலேயே வட மாகாண சபையின் நிர்வாகம் செயற்திறனற்ற ஒன்றாகும் எனக் கூறினார்.
விவாதத்தில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளுக்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற விவகார அமைச்சர் எல்.எம்.அதாவுல்லா பதிலளித்தார்.
நவம்பர் மாதம் முதல் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு 5,000 ரூபாவிலிருந்து இருந்து 15,000 ரூபாவாகவும், உப தவிசாளருக்கான கொடுப்பனவு 6,000 ரூபாவில் இருந்து 20,000 ரூபாவாகவும், தவிசாளருக்கான கொடுப்பனவு 10,000 ரூபாவில் இருந்து 25,000 ரூபாவாகவும் ஜனாதிபதியினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று நகர சபை உறுப்பினரின் கொடுப்பனவு 7,000 ரூபாவில் இருந்து 20,000 ரூபாவாகவும், நகர சபைத் தலைவரின் கொடுப்பனவு 15,000 ரூபாவிருந்து 30,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அதாவுல்லா கூறினார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மோட்டர் சைக்கிள் பெற்றுக்கொடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற விவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYko1.html
பொது வேட்பாளராக அமைச்சர் ஒருவரை நிறுத்துமாறு கோரும் சந்திரிக்கா
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 10:20.27 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்துள்ளார்.
பொது வேட்பாளராக போட்டியிடுமாறு ரணில் விடுத்த கோரிக்கையை சந்திரிக்கா நிராகரித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், அரசாங்கத்தில் உள்ள அதிகளவான எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்களை வெளியேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதி ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்துவது மிக பொருத்தமாக இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.
அதேவேளை பொது வேட்பாளராக யார் நிறுத்தப்பட வேண்டும் என்ற விடயம் குறித்து சந்திரிக்கா, ரணில் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYko2.html
பல்வேறு சிரமங்களுக்கு பின் நாடு திரும்பிய பணிப் பெண்கள்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 10:42.48 AM GMT ]
இன்று அதிகாலை 41 பணியாளர்கள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டுக்குச் சென்று இவர்கள் பல துன்புறுத்தல்களுக்கும் இலக்கானதாக கூறப்படுகின்றது.
நாடு திரும்பியவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYko4.html
எக்னேலியகொட பற்றி விசாரணை கோரும் இணையத்தள ஊடகவியலாளர்கள்
[ சனிக்கிழமை, 15 நவம்பர் 2014, 10:44.58 AM GMT ]
இணையத்தள ஊடகவியலாளர்களின் சங்கத்தின் பிரதானிகள், அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ரத்வத்தே, ஆகியோரை சந்தித்த போதே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கோரிக்கை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
லங்கா ஈ நியூஸ் இணைத்தளத்தில் பணியாற்றி கொண்டிருந்த நிலையில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலியகொட காணாமல் போனார்.
அரசாங்கத்திற்கு எதிராக செய்திகளை வெளியிட்டதன் காரணம் அவர் கடத்தி செல்லப்பட்டு, காணாமல் போக செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBSZKYko5.html
Geen opmerkingen:
Een reactie posten