donderdag 20 november 2014

அமைச்சர் டக்ளஸைச் சந்திக்க மறுத்த ஐஸ் கிறீம் உரிமையாளர்கள்!

ஜனாதிபதியை ஆதரித்து நாடு பூராவும் சுவரொட்டிகள் ஒட்டும் விமல் வீரவன்ச
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 02:22.17 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவை ஆதரிக்கும் முகமாக, விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி நாடு பூராவும் ஒன்றரை இலட்சம் சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மூன்றாவது முறையாகவும் நாட்டுக்கு வெற்றி’ எனும் தொனிப்பொருளில்  இச் சுவரொட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளுக்கென தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர் பிரியஞ்சித் விதாரண நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiu0.html

அமைச்சர் டக்ளஸைச் சந்திக்க மறுத்த ஐஸ் கிறீம் உரிமையாளர்கள்!
[ வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014, 02:31.19 AM GMT ]
யாழ் மாவட்டத்தில் ஐஸ் கிறீம் உற்பத்தி நிலையங்களைப் பரிசோதனை செய்த சுகாதாரத் துறையின் விசேட குழுவினர் உற்பத்தி நிலையங்களின் குறைபாடுகளைத் திருத்தம் செய்வதற்காகத் தற்காலிகமாக அவற்றை மூடியிருந்தனர் என்பதுவும் பின்னர் அவற்றில் பெரும்பான்மையானவை மீளவும் திறக்கப்பட்டுவிட்டன என்பதுவும் நாம் அறிந்ததே.
இதனிடையே இவ்விடயத்தை அரசியலாக்க முற்பட்ட சிலர் அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர் என்பதுவும், இதில் மிகச் சொற்ப அளவினரே கலந்து கொண்டதுடன் முன்னமே திட்டமிட்ட வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிரான சுலோகங்கள் காணப்பட்டதுவும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே  17.11.2014 அன்று கொழும்பிலிருந்து திரும்பிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விசேட கூட்டம் ஒன்றை கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் 8 பேர் வரையிலான உற்பத்தியாளர்களே கலந்து கொண்டார்கள்.
ஏற்கனவே 40 வரையான ஐஸ் கிறீம் உற்பத்தி நிலையங்கள் குறைபாடுகள் நிவர்த்தி செய்ய்ப்பட்டு சுமுகமான முறையில் இயங்கி வரும் நிலையில்  கூட்டம் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்ததாக அறிய முடிகின்றது.
இதன்போது வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா அவர்களும் உடனிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRUKYiu1.html

Geen opmerkingen:

Een reactie posten