vrijdag 14 november 2014

நான் ஓர் ஸ்ரீலங்கன் எழுத்தாளராக இங்கு வரவில்லை, அது எனது அடையாளமும் அல்ல: புது டெல்லியில் தீபச்செல்வன்

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 11:13.26 AM GMT ]
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவிலிருந்து இலங்கை வந்த விமானப் பயணி ஒருவரே விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளையன் ராசகுமார் என்ற பெயருடைய இவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய உறுப்பினர் என்று பாதுகாப்புப் படையினரால் இனம் காணப்பட்டிருந்தார்.
எனினும் இறுதி யுத்தத்தின் பின்னர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடையவோ, புனர்வாழ்வு பெறவோ முன்வராது நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.
இந்நிலையில் மலேசியாவில் இருந்து மீண்டும் நாடு திரும்பிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக விமான நிலைய வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlr4.html
பத்துக்கோடி ரூபா பெறுமதியான தங்கம் கொழும்பில் கைப்பற்றப்பட்டது
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 11:22.59 AM GMT ]
கொழும்பு மட்டக்குளி பிரதேசசத்தில் பத்துக் கோடி ரூபா பெறுமதியான தங்கம் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட இந்தத் தங்கம் சுமார் இருபது கிலோகிராம் எடை கொண்டது என்று தெரிய வந்துள்ளது.
இதுவரை இலங்கையில் தனிநபர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அதிகூடிய எடை கொண்ட தங்கம் இதுவென்று பொலிசார் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் உடனடியாக திறைசேரியில் சேர்க்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlr5.html

நான் ஓர் ஸ்ரீலங்கன் எழுத்தாளராக இங்கு வரவில்லை, அது எனது அடையாளமும் அல்ல: புது டெல்லியில் தீபச்செல்வன்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 11:35.51 AM GMT ]
நான் ஓர் ஸ்ரீலங்கன் எழுத்தாளராக இங்கு கலந்து கொள்ளவில்லை அதுவல்ல எனது அடையாளம் என்று தெரிவித்த ஈழக் கவிஞர் தீபச்செல்வன் ஓர் ஈழத்தவன் என்பதே எனது அடையாளம் என்றும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா என்ற தேசம் எங்களை அடக்கி ஒடுக்கி அழித்து வருகிறது என்றும் அந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதே ஈழத்தவர்களின் கனவு என்றும் குறிப்பிட்டார்.
அண்மையில் நியூ டெல்லியில் நடைபெற்ற சமன்வய்: இந்திய தேசிய மொழிகளின் விழாவில் கலந்து கொண்டுபேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். குறித்த விழாவில் இந்திய மாநிலங்களிலிருந்தும் முக்கிய எழுத்தாளர்கள் கலந்துகொண்டதுடன் ஈழம், பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டனர்.
Transnation: Poetry and the Idea of Nation என்ற தலைப்பில் இடம்பெற்ற நிறைவுநாள் முதல் அமர்வில் டெல்லியை சேர்ந்த கவிஞர் அசாட் சைடி நேபாளத்தை சேர்ந்த கவிஞர் பெஞ்சு சர்மா ஈழத்தை சேர்ந்த தீபச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஈழ தேச ஒடுக்குமுறைக்கு எதிரான இலக்கியங்கள் என்ற தலைப்பில் தீபச்செல்வன் பேசினார்.
அவர் மேலும் அங்கு குறிப்பிடுகையில்:
இரண்டாயிரம் வருட பாரம்பரியம் உள்ள ஈழத் தமிழ் இலக்கியங்கள் ஈழ தேசத்தின் தனித்துவமான வரலாற்றை பறைசாற்றும் சாட்சியங்கள். இன எழுச்சி சார்ந்த ஈழ இலக்கியம் எங்களை ஒடுக்குபவர்களுக்கு எதிரான ஆயுதம்.
தமிழக மக்களும் ஈழ மக்களும் தமிழ்மொழியை தாய் மொழியாக கொண்டுள்ளபோதும் ஈழத் தமிழர்கள் தனித்துவமான தேசிய இனமாக திகழ்கின்றனர். ஈழத்தில் இலக்கிய புலத்திலும் வரலாறுதோறும் தனித்துவம் மிக்க இலக்கியங்கள் தோன்றியிருகின்றன.
தமிழில் போர் இலக்கியத்திற்கு நீண்ட பாரம்பரியம் இருக்கின்றது. ஈழப் போர் இலக்கியம் போர் சார்ந்த புதிய அனுபவங்களையும் அதனுடன் தொடர்புடைய புதிய அரசியலையும் பதிவாக்கியுள்ளது.
இன ஒடுக்குமுறைக்கு எதிரான இலக்கியங்கள் மத்திரமின்றி பெண் எழுச்சி, தீண்டாமைக்கு எதிரான குரல்கள் என சமூக விடுதலை சார்ந்த இலக்கியங்களும் ஈழத்தில் தனித்துவமானவை.
இதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் படைப்பாளிகளின் ஆக்கப்படும் இலக்கியங்கள் ஈழ தேச அனுபவங்களை புலம்பெயர் நாடுகளின் மொழிகளிலும் பார்வைகளிலும் பகிரவும் புலம்பெயர் தேச அனுபவங்களை தமிழ்மொழியில் பகிரும் தேசங்களைக் கடக்கும் அனுபவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈழ தேசத்தை ஸ்ரீலங்கா தேசம் கடுமையாக ஒடுக்கிவரும் நிலையில் அந்த ஒடுக்குமுறைக்கு எதிரான குரலை பதிவு செய்வது என்பது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, இராணுவத்தால் ஆளும் ஒரு தேசத்தில் மிகவும் சவால் நிறைந்த பணி.
ஈழத்தில் உள்ள பல எழுத்தாளர்கள் இந்த சவால் மிக்க பயணத்தை தொடர்கின்றனர். இன ஒடுக்குதலுக்கு உள்ளாகியுள்ள எங்கள் தேசம் பற்றியும் வாழ்வின்மீது ஈழத்தவர்களுக்கு இருக்கும் கனவு பற்றியதுமான ஈழ இலக்கியங்கள் ஜனநாயக ஆயுதம்.
அத்துடன் நிகழ்வின் இறுதியில் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்த தீபச்செல்வனின் PRAY FOR MY LAND என்ற தொகுதியிலிருந்து இரு கவிதைகளும் வாசிக்கப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlr6.html

Geen opmerkingen:

Een reactie posten