maandag 17 november 2014

கிழக்கை மறந்த கூட்டமைப்பு வடக்கை கதைக்கிறது கருணாவின் கண்டுபிடிப்பு!

சோபித தேரரின் மௌனம் பல சந்தேகங்கள்….

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது
ஜனநாயகக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் ஏற்பாட்டின் கீழ் மாதுளவாவே சோபித தேரர் ஜனாதிபதியை சந்தித்தார்-டிரான் அலஸின் தந்தையின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது சோபித தேரர் வலியுறுத்திவரும் அரசமைப்புமாற்றம் தொடர்பான விடயங்கள் ஏற்கனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவினால் ஆராயப்பட்டுவருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.இதன் காரணமாக அதனை மையப்படுத்தி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரங்கள் எதனையும் முன்னெடுக்கவேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து தேரருக்கு தெளிவுபடுத்துமாறு அமைச்சர் நிமாலை கேட்டுக்கொண்ட ஜனாதிபதி தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் இந்த விடயம் குறித்து தான் கவனம் செலுத்துவதாகவும், அதனால் தற்போதைக்கு இது தொடர்பான பிரச்சாரங்களை முன்னெடுக்கவேண்டாம் எனவும் சோபித தேரரை கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதியினுடான இந்த சந்திப்பின்பின்னர் மாதுளவாN சோபித தேரர் வேறு எந்த நடவடிக்கைகளிலும் பங்குகொள்ளவில்லை. இதன்பின்னர் அவர் வெள்ளிக்கிழமை மாலபேயில் உள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு இதயநோய்க்கான பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் மத்தியில் பொதுவான கருத்து காணப்படாதது குறித்தும்,ஜாதிக ஹெல உறுமய உறுதியான நிலைப்பாட்டை எடுக்காதது குறித்தும் சோபித தேரர் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.jvpnews.com/srilanka/87040.html

மாலக்கவின் சகா கைது….

பம்பலபிட்டியவிலுள்ள இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற கைகலப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/87037.html

கிழக்கை மறந்த கூட்டமைப்பு வடக்கை கதைக்கிறது கருணாவின் கண்டுபிடிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எவ்வித சேவையையும் ஆற்றுவதில்லை என்பதே ஆளும் கட்சியின் குற்றச்சாட்டாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு களுவளை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடத்தல்கள் காணாமல் போதல்கள் தொடர்பில் எவ்வித அச்சமும் இன்றி கிழக்கு மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து கிழக்கில் தாம் சமாதானத்தை நிலைநாட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட முடியாது எனவும், வேட்பாளர் ஒருவரைத் தெரியும் ஆற்றல் கூட எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/87034.html

Geen opmerkingen:

Een reactie posten