தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 13 november 2014

இந்திய மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு! ஜனாதிபதி இன்னும் தீர்மானிக்கவில்லை?

உச்சநீதிமன்றத் தீர்ப்பை பகிரங்கப்படுத்த முடியாது! சபாநாயகர் திட்டவட்டம்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 11:14.32 PM GMT ]
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பகிரங்கப்படுத்த முடியாது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ச நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டிருந்தார். அது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதம் இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை.
இந்நிலையில் குறித்த கடிதத்தில் இருக்கும் விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிந்து கொள்ள ஆவன செய்யுமாறு ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
குறித்த தீர்ப்பின் பிரதியை நாடாளுமன்ற அவையில் சமர்ப்பிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ச, குறித்த தீர்ப்பை பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த தீர்ப்பை அறிந்து கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிமையைக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க சபாநாயகரிடம் சுட்டிக்காட்டினார்.
அதனை ஏற்றுக் கொண்ட சபாநாயகர் சமல் ராஜபக்ச, குறித்த தீர்ப்பின் பிரதியொன்றை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் சாத்தியம் குறித்து ஆராய்ந்த பின் பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmw7.html
கரு ஜயசூரிய வந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது!- அமைச்சர் பீலிக்ஸ்
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 11:19.25 PM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கரு ஜயசூரிய களமிறங்கினாலும் அவரால் வெற்றி பெற முடியாது என்று அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமை வேட்பாளராக போட்டியிட்டவர் கரு ஜயசூரிய. ஆனாலும் அவரால் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெறமுடியவில்லை.
முதன்முதலாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட உபேக்ஷா சுவர்ணமாலியை விடவும் குறைவான வாக்குகளையே பெற்றார்.
இந்நிலையில் கரு ஜயசூரிய ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்டு என்ன சாதிக்க முடியும்? ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கும் வாக்குகளைக் கூட அவரால் பெற முடியாது போய்விடும்.
இன்னொரு புறத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் கரு ஜயசூரிய தான் என்பதை யாரும் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
இதுவரை அவர்களால் ஒரு வேட்பாளரை ஒருமனதாக தெரிவு செய்ய முடியவில்லை. அவ்வாறிருக்க தேர்தலில் அவர்கள் எவ்வாறு வெற்றி பெற முடியும் என்றும் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா கேள்வியெழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmxy.html
இந்திய மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு! ஜனாதிபதி இன்னும் தீர்மானிக்கவில்லை?
[ வியாழக்கிழமை, 13 நவம்பர் 2014, 11:26.05 PM GMT ]
பேரில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து ஜனாதிபதி இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்களையும் விடுவிக்குமாறு கோரி இந்தியாவின் தமிழ்நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த மீனவர்கள் ஐந்து பேரையும் பொதுமன்னிப்பின் கீழ் ஜனாதிபதி விடுதலை செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்திருந்தார்.
எனினும் ஜனாதிபதி அவ்வாறான தீர்மானமொன்றை இதுவரை எடுக்கவில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் த ஹிந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதே பத்திரிகையில் மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான பிரதியமைச்சர் பிரபா கணேசனின் நேர்காணலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBSXKYmxz.html

Geen opmerkingen:

Een reactie posten