woensdag 12 november 2014

அனந்தி பின்னால் மர்ம நபர்கள்….

மங்கள சமரவீரவின் விலை 1200 மில்லியன் ரூபா

சிறியதொரு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டாலும் இணைந்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார். துறைமுக அபிவிருத்தி அல்லது வெளிவிவகார அமைச்சுப் பதவியை வழங்கினால் மட்டுமே ஆளும் கட்சியில் இணைந்து கொள்வேன் என மங்கள கோரி வந்தார். இந்தக் கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்திருந்தது. எனினும் சிங்கப்பூரில் வைத்து ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்வது குறித்த அவருடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் விதித்த நிபந்தனைகளை குறைத்துக்கொண்டு பணக் கொடுக்கல் வாங்கல் அடிப்படையில் மங்கள சமரவீர ஆளும் கட்சியில் விரைவில் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.


http://www.jvpnews.com/srilanka/86544.html


ராஜபக்சேவின் சூழ்ச்சி வைகோ

ஏனெனில் இந்த மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் தமிழ் மொழியை பற்றி மிகவும் சிறப்பாக பேசினார்கள். மேலும் ஈழத் தமிழர்களுக்கும் பலத்த ஆதரவு தெரிவித்தனர். மலேசியாவில் நடந்த தமிழ் மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் அங்குள்ள துணை முதல்– அமைச்சர் பேராசிரியர் ராமசாமி. மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மலேசியாவை தலைமையிடமாக கொண்டு உலக தமிழர்கள் செயலகம் செயல் பட இருக்கிறது. இதற்கு துணை முதல்–அமைச்சர் ராமசாமி தலைவராக இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து இலங்கையில் தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை ராஜபக்சே ரத்து செய்வார் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளாரே என்று நிருபர்கள் வைகோவிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது வைகோ கூறும் போது, ‘‘இது ராஜபக்சேவின் அரசியல் சூழ்ச்சி. இதற்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து போதை பொருள் கடத்தி வந்தவர்களுக்கு கூட தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. அப்பாவியான 5 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்திய அரசை ராஜபக்சே தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சி செய்கிறார். இது தமிழர்களிடையே தன்னை நல்லவராக காட்டிக் கொள்ளும் நாடகம் ஆகும் என்றார்.
முன்னதாக விமான நிலையத்துக்கு வந்த வைகோவை ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சோமு, ஆலந்தூர் நகர செயலாளர் சின்னவன், எழும்பூர் பகுதி செயலாளர் தென்றல் நசீர், கண்ணப்பன், கராத்தே பாபு, திருநாவுக்கரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
http://www.jvpnews.com/srilanka/86559.html


அனந்தி பின்னால் மர்ம நபர்கள்….

இது தொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்கள் இருவரிடம் தெரிவித்தேன். அத்துடன், எனக்கு தொடர்ந்து இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிலவி வருவதாக வட மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் பலமுறை முறையிட்டுள்ளேன் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அனந்தி சசிதரன் மேலும் கூறியதாவது,
செவ்வாய்க்கிழமையன்று நான் கொழும்பில் இருந்தேன். காலை முதல் மாலை வரை பலரையும் சந்தித்து உரையாடினேன். அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், நான் செல்லும் இடமெல்லாம் மோட்டார் சைக்கிளில் பயணித்த மர்ம நபர்கள் சிலர், என்னைப் பின்தொடர்ந்தனர்.
அவர்கள் மிகவும் கொடூரமான தோற்றமுடையவர்களாகவும் என்னை கொல்ல வேண்டும் என்ற நோக்குடன் காணப்படுவதையும் நான் அவதானித்தேன்.
எனது சட்டத்தரணியைச் சந்திக்க சென்றிருந்தேன். அங்கும் அவர்கள் என்னை பின்தொடர்ந்து வந்தனர். அந்த சட்டத்தரணியும் கடந்த 2 மாத காலமாக 24 மணிநேர கண்காணிப்பிலேயே இருக்கின்றார்.
மேலும், இரு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களையும் நான் அன்றைய தினம் சந்தித்து பேசினேன். இந்த பின்தொடர்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் தூதரகங்களுக்கும் அறிவித்தேன். இதுபோன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல் தொடர்பாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் பல தடவைகள் முறையிட்டுள்ளேன்.
வடமாகாணசபை உறுப்பினர்களில், எனக்கும் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இது தொடர்பில் எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் வடமாகாண சபை எடுக்கவில்லை.
நாம் உண்மைகளை கதைக்கின்றோம். மக்களுக்காக பேசுகின்றோம். சர்வதேச ரீதியில் எமது பேச்சுக்கு மதிப்பு கிடைத்துள்ளது. எமக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்புக்கள் மீளப்பெறப்பட்டு பல நாட்கள் கழிந்துவிட்டன.
இது தொடர்பாக நான் அவைத்தலைவரிடம் கேட்கும் போதெல்லாம் அவர் சிரித்தபடி பதில் சொல்கிறார். அத்துடன், அவைத்தலைவர் ஒரு தடவை மாத்திரம் பொலிஸ் திணைக்களத்திற்கு கடிதம் எழுதிவிட்டு பேசாமல் இருக்கின்றார். நாங்கள் உயிருக்கு அஞ்சவில்லை. துணிந்துதான் இங்கு வந்தோம் என அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/86564.html

Geen opmerkingen:

Een reactie posten