தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 november 2014

இந்தியாவை புறம் தள்ளி சீனாவுடன் உறவைப் பேணுவது ஆபத்தானது: பாராளுமன்றில் சம்பந்தன் எச்சரிக்கை

விமல் வீரவன்ஸவை தவிர மகிந்தவிற்கு யாருமில்லை
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 10:24.16 AM GMT ]
எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும் செயற்பட்டாளர்களையும் விலை கொடுத்து வங்குவதை விட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மாற்று வழி கிடையாது என பெயரை குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவர் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தில் இருந்து விலகும் நபர்களில் இந்த அமைச்சரும் உள்ளாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.
அந்த இணையத் தளத்திடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை அறிந்தவர்கள் அரசாங்கத்தில் இணைய  மாட்டார்கள். நாங்கள் சிக்கியிருக்கும் பொறியின் நீளமும் அகலமும் எங்களுக்குதான் தெரியும்.
எதிர்க்கட்சியினருக்கு பதிலளிக்க எத்தனை அமைச்சர்கள் முன்வந்தனர்?  மேர்வின் சில்வா, மகிந்தானந்த அளுத்கமகே, தினேஸ் குணவர்தன, ராஜித சேனாரத்ன இந்த அமைச்சர்கள் தற்போது ஏன் இதற்கு முன்வருவதில்லை?.
விமல் வீரவன்ஸ மாத்திரமே இருக்கின்றார். அவர் அரசியலில் விளைவுகளை பொருட்படுத்தாத ஏழை. மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவின் தவறுகளை பயன்படுத்திக் கொண்டு மேர்வின் சில்வாவை தாக்குகின்றனர்.
ராஜபக்ஷவினர் அமைச்சர்களை தாக்கி இறுகப்பற்றி கொள்வதற்காக பிள்ளைகளை பழிவாங்கும் நபர்கள்.
அரசாங்கத்தை விட்டு போகிறார்கள், போகாதவர்கள் பற்றி எனக்கு தெரியாது. பேசும் அளவுக்கு நம்பிக்கையில்லை.
நான் அமைச்சர் என்ற வகையில் வெறுத்து போனது இன்று நேற்றல்ல. சம்பிக்க ரணவக்க மீது நிலக்கரி பிரச்சினையை கொண்டு தாக்குதல் தொடுத்தனர். அவர் அதனை மறுபக்கம் சூழற்றி விட்டார். ஆனால், மேர்வின் சில்வா போன்றவர்களுக்கு எம்மால் அப்படி செய்ய முடியாது எனவும் அந்த அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlr1.html
அமைச்சுப் பதவி, சுகபோக வாழ்க்கையை துறக்கத் தயார்: மேர்வின் சில்வா
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 10:59.02 AM GMT ]
அமைச்சுப் பதவியையும், சுகபோக வாழ்க்கையையும் துறந்து வீதிக்கு இறங்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று களனி, கிரிபத்கொடையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகளை துறந்து வெளியேற நான் தயாராகவே இருக்கின்றேன். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பாதுகாப்பு மற்றும் சுகபோக வாழ்க்கை என அனைத்தையும் இழக்க நேரிடும். ஆனாலும் அவை இல்லாமல் வீதியில் இறங்கி நடக்கும் தைரியம் எனக்கு உண்டு.
எனக்குத் தோன்றினால் நான் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன். அமைச்சுப் பதவி உள்ளிட்ட அனைத்தையும் தூக்கி எறிந்துவிடுவேன். அதன் பின் வரும் இழப்புகள் குறித்து கவலைப்படும் நிலையில் நான் இல்லை என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நீதித்துறையில் குறுக்கிடுவதில்லை – மேர்வின் சில்வா
அரசாங்கம் பொலிஸ் மற்றும் நீதித்துறையில் குறுக்கிடுவதில்லை என பொது உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
முகத்துவாரத்தில் நேற்று ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கை அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கம் பொலிஸ் மற்றும் நீதித்துறையில் தலையீடு செய்கிறது என்றால், தனது மகன் மாலக்க சில்வா, வெளிநாட்டவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் 16 நாட்களுக்கு மேல் எப்படி விளக்கமறியலில் இருக்க முடியும் எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் மேர்வின் சில்வா உரையாற்றிய போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அங்கு பிரசன்னமாகியிருந்தார். மாலக்க சில்வா கடந்த 1 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் இரண்டு முறை அவரது பிணை விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
மாலக்க சில்வா கைது செய்யப்படும் முன்னர் அமைச்சர் மேர்வின் சில்வா அவரை சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தார். மாலக்க சில்வாவின் பெயர் தற்போது கடந்த காலத்திலும் பல சர்ச்சைக்குரிய சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருந்தது.
ஒரு பெண் சம்பந்தப்பட்ட விடயம் காரணமாக கடந்த வருடம் கொழும்பில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இனந்தெரியாத குழுவினர் மாலக்க சில்வை மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதற்கு முன்னர் கொழும்பில் உள்ள ஹொட்டல் வளாகத்தில் இராணுவ அதிகாரியை தாக்கி தலையில் காயம் ஏற்படுத்தியதாக மாலக்க சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் அமைச்சரின் மகனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlr3.html
இந்தியாவை புறம் தள்ளி சீனாவுடன் உறவைப் பேணுவது ஆபத்தானது: பாராளுமன்றில் சம்பந்தன் எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 10:48.15 AM GMT ]
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான உறவைப் புறம் தள்ளி சீனாவுடன் உறவைப் பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை ஆபத்தையே எதிர்கொள்ளும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் உரையாற்றும் போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதன்காரணமாக எதிர்காலத்தில் நாடு பெரும் விபரீதங்களையே சந்திக்க நேரிடும். ஆசியாவிலுள்ள எல்லா நாடுகளுடனும் இலங்கை உறவு வைத்துக் கொள்வது அவசிம்தான்.
எனினும் தொன்று தொட்டு இலங்கையுடன் உறவுவை வளர்த்துவந்துள்ள இந்தியாவைப் புறந்தள்ளி - கோபமடையச் செய்து சீனாவுடன் உறவைப் பேணுவது ஆரோக்கியமானதன்று.
இன்று போரியல், பொருளாதாரம், அரசியல் போன்ற சகல துறைகளிலும் சீனாவிடம் இலங்கை உதவியை நாடி நிற்கிறது. இதன்காரணமாக இலங்கை சீனாவின் ஆதிக்கத்துக்குள் வந்துள்ளது.
இது நாட்டுக்கு அழகல்ல. இலங்கை அரசு இந்தவிடயத்தில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். இந்தியாவுடனான உறவை பலப்படுத்தவேண்டும். சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நேரடியாக இலங்கைக்கு வந்து கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்ற சம்பவம் குறித்து இந்திய பாதுகாப்பு துறை கடும் சீற்றம் அடைந்துள்ளது.
தமது அதிருப்தியை இந்திய பாதகாப்பு துறை இலங்கையிடம் தெரிவித்துள்ளது. எனவே எதிர்காலத்தில் பிராந்திய நாடுகளுடனான வெளிவிவகார கொள்கைகளை சரியாகக் கடைப்பிடிப்பதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlr2.html

Geen opmerkingen:

Een reactie posten